டைம் பாஸூக்காக அரசியலுக்கு வரக்கூடாது : ரோஜா

திருப்பதியில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா நிருபர்களிடம் பேசினார். அப்போது, “எம்ஜிஆர்., ஜெயலலிதா போல ரஜினிகாந்த் புகழ் பெற மனதார வாழ்த்துகிறேன். ரஜினிகாந்த் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும். விஷால் அரசியலுக்கு வரலாம். ஆனால் டைம் பாஸ் செய்வதற்காக விஷால் அரசியலுக்கு வரக்கூடாது. திருப்பதி கோவிலில் விஐபி தரிசனத்தில் முறைகேடுகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டிய விஜிலன்ஸ் அதிகாரிகள் என்னை […]

Continue Reading

ஜெயம் ரவி 24 அப்டேட்!

ஜெயம் ரவியின் 24வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், அந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகி இருக்கிறது. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் […]

Continue Reading

“எரும சாணி” தந்த அதிர்ஷ்டம்!!

அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘எரும சாணி’ விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘செம போத ஆகாத’, ‘ருக்மணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘ஒத்தைக்கு ஒத்த’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா. இப்படங்களைத் தொடர்ந்து ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களின் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். இப்புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சாம் […]

Continue Reading

ரஜினியை அவமதித்த தயாரிப்பாளர்.. பொங்கி எழுந்த முன்னாள் செயல்!

ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் […]

Continue Reading

சிங்கப்பூரின் தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளர்

ஷபிர் என்று எல்லாராலும் ஒருமித்தமாக, அன்பாக அழைக்கப்படும் ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச் சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார். 35 வயதுக்கு உள்ளாகவே தனது துறையில் அளப்பரிய சாதனைகள் செய்து, சமுதாயத்திற்கு தனது ஆற்றலால் சிறந்த தொண்டு ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு இந்த […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டம் – அப்டேட்!

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் திரையரங்கு உரிமையை பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியிருந்தது. அதை தொடர்ந்து டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை அமேசான் பிரைம் மற்றும் சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், திரையரங்கு […]

Continue Reading

ஜி.வி.பிரகாஷ் அரசிடம் வைத்த கோரிக்கை!

சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய “ஓக்கி” புயலில் பாதிக்கப்பட்டு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி கன்னியாகுமரியில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் அரசிற்கு கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில், “நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவனை முறையிலும் அரசு […]

Continue Reading

மாற்றத்திற்கான விதைகளுடன் சரத்குமார்

APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடுகளை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு செய்தல், பணப்பரிவர்த்தனைகள், அனைத்து விதமான பயணங்களை பதிவு செய்தல், வெளியூர்களில் தங்கும் விடுதிகள் பதிவு செய்தல், பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் வாங்குதல், பலதரப்பட்ட பொருள்களை வாங்குதல், விற்பனை செய்தல், தொலைக்காட்சி நிகழ்வுகள், பத்திரிக்கை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பயன்பாடுகளை செயலிகள் மூலம் அடைய முடியும். அந்த வகையில் ஒரு திரைப்பட நடிகராக, பத்திரிக்கை […]

Continue Reading

தேடிச் சென்று தம்பதிகளை வாழ்த்திய ஓபிஎஸ்

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த […]

Continue Reading

பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!

தனது மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித். ரஜினியை முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் கபாலியாக முன்னிறுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பயனாக மீண்டும் ரஜினியை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தற்போது “காலா”வில் ரஜினியை இயக்கி வரும் ரஞ்சித், ரஜினியின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியாவது, “என்மேல் அன்பும் பெரும் நம்பிக்கையும் கொண்ட “காலா”அவர்களுக்கு மனமகிழ்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று […]

Continue Reading