சென்னையில் “உலக இசைகளின் சங்கமம்” – தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும்                                                  “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் குறித்து விஷால்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பள உயர்வு 2.57 மடங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் அரசின் முடிவை 30 தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. என்றாலும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் தங்களது சம்பள உயர்வு கோரிக்கையில் உறுதியாக […]

Continue Reading

சிம்பு, அனிருத்தைத் தொடர்ந்து கமல் மீது வழக்கு

ஆர்.கே.நகருக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் இடம்பிடித்தன. அமெரிக்காவில் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருப்பதால் கமல் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கமல் கருத்து தெரிவித்தார். அதில், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் […]

Continue Reading

ஆம்பள மனோரமா, பொம்பள கமல் : வர்ணித்த விக்னேஷ் சிவன்

ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய போது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த […]

Continue Reading

எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த விஜயகாந்த்

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் […]

Continue Reading

வரிசையாய் வரும் வாரிசுகள்!

அரசியலில் தான் வாரிகளின் ஆதிக்கம் என்றால், சினிமாத்துறை அதற்கு மேல்.. இங்கு கோலோச்சுகிற பாதிக்கு மேற்பட்டோர் வாரிசுகளாகத் தான் இருக்கிறார்கள். அந்த வகையில், அடுத்த தலைமுறை நடிகர்களை கோலிவுட் உருவாக்க ஆரம்பித்திருக்கிறது போல. வரிசையாக வாரிசுகள் அறிமுகமாக தொடங்கியிருக்கிறார்கள் சமீபத்தில். ஏற்கனவே நடிகர் விக்ரமின் மகன் துருவ், பால இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி “டிக் டிக் டிக்” படத்தில் அவருக்கு மகனாகவே அறிமுகமாகிறார். இவர்களின் வரிசையில் தற்போது, காமெடி நடிகர் […]

Continue Reading

கார்த்தியுடன் சேரப்போகும் மூன்றாவது ஹீரோயின்!

நடிகர் சூரியாவின் “2டி எண்டர்டெயின்மெண்ட்” தயாரிக்கும் படத்தில் கார்த்தி நடிப்பது எல்லோரும் அறிந்ததே. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். படத்திற்காக “மேயாத மான்” ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் “வனமகன்” சாயிஷா ஆகியோர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் படத்தில் நடிக்கும் மூன்றாவது நாயகி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமுத்திரகனி இயக்கிய “தொண்டன்” படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்த ஆர்த்தனா பினு இந்தப் படத்தின் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள […]

Continue Reading

நூறு விளக்கம் சொன்ன டி இமான்

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை […]

Continue Reading

நம்மைப் பிரிக்க வேண்டும் என நினைப்பவர் நல்ல தலைவனாக இருக்க முடியாது!

  சினிமாவைத் தாண்டியும் விஜய் சேதுபதி போல ஒரு எதார்த்தமான மனிதரை கண்பதரிது. முன்பை விட பேச்சிலும் செயலிலும் அதிக நிதானம் காட்டுகிறார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கிறார். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல், மனதில் தோன்றியதை ஆழமாக சிந்துத்து கருத்து சொல்கிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “இங்கே நடக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், “எதைப் பத்தி பேசினாலும், அது சாதியில் வந்து […]

Continue Reading

வித்தக கவிஞரின் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர்

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா. விஜய், கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகர் விக்னேஷ், ஒய் ஜி மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ் ஏ […]

Continue Reading