சினிமா துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் முன்னிலைப்படுத்தி பாரத் நிதி என்ற அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து நடத்தும் ‘இந்திய பொழுதுபோக்கு துறை: உலகளாவிய தலைமையாக உருவாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு கான்ஃபெரன்ஸை வரும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடத்த இருக்கிறது. அது குறித்து விழா அமைப்பாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கி பேசினர்.    இந்த மாதிரி ஒரு கான்ஃபெரன்ஸ் முதன்முறையாக […]

Continue Reading

மதுபானக்கடை ரவியின் ஃபார்முலா

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து நல்ல பெயர் வாங்குவது எளிது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்குவது ரொம்பவும் கஷ்டம். அந்த வகையில் சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார் ரவி. மதுபானக்கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்ததால் மதுபானக்கடை ரவி என்றால் கோடம்பாக்கம் முழுக்க தெரிகிறது. ஆரம்பத்தில் காமதேனு மசாலா என்ற பெயரில் மசாலா பாக்கெட் தொழிலில் ஈடுபட்டிருந்த ரவி இன்று சினிமாவில் மசாலா காதாபாத்திரங்களில் திறமை காட்டி […]

Continue Reading

கிசுகிசுவுக்கு விடைதரும் ஆந்தம்

எத்தனையோ ஆந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும், ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆந்தம். மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவி ஆந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. […]

Continue Reading

ரஜினி கட்சியில் இணைந்த முதல் பிரபலம்!

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரி ராஜு மகாலிங்கம். இவர், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’ படத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார். தற்போது அவர் ‘2.0’ படத்தோடு தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார். இது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியிருப்பதாவது, “2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை ஈர்த்துள்ளது. எனவே திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பயணத்தில் என்னையும் இணைத்துக் […]

Continue Reading

பா.இரஞ்சித் வழங்கும் கானா இசை நிகழ்ச்சி

முதன் முறையாக கானா இசையுடன் ராப் மற்றும் ராக் இசையும் இணைந்து புதுவித இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவிருக்கிறது. சென்னையின் கானா இசைக்கலைஞர்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள். இதுவரை கானா மட்டும் பாடிக்கொண்டிருந்த நம் இசைக்கலைஞர்கள் ஐரோப்பிய ஆப்பிரிக்க இசைகளான ராப், ராக் இசையோடு இணைத்து ஒரு புதிய இசை அனுபவத்தை சென்னை மக்களுக்கு தரவிருக்கிறார்கள். இசைக்கலைமூலமாக புரட்சியும், விடுதலையும் பெற முடியும் என்பதற்கு ஆப்பிரிக்க இசைக்கலைஞர்களை உதாரணத்திற்கு சொல்வார்கள். பல புரட்சிகளுக்கு பாடல்களும், இசையும் பெரும் […]

Continue Reading

விஜய் சேதுபதியின் டபுள் ட்ரீட்!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 4 படங்கள், 5 படங்கள் என எப்படித்தான் நடித்துத் தள்கிறாரோ? என்று மற்றவர்கள் மளவிற்கு அடுத்தடுத்து படங்கள் நடிக்கக் கூடியவர். அவரது எளிமையான சுபாவத்திற்காகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. சென்ற ஆண்டு மொத்தம் 4 படங்கள் வெளியானது விஜய் சேதுபதி நடிப்பில். அதைப்போல இந்தாண்டும் அவரது படங்கள் வரிசையில் நிற்கின்றன. அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்திலேயே அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை விஜய் சேதுபதி தரவிருக்கிறார். […]

Continue Reading

விலகினாரா யுவன்?

அஜித் என்றால் உடனே நினைவுக்கு வருவது யுவன் ஷன்கர் ராஜாவின் பீஜிஎம் தான். தீனா, பில்லா, மங்காத்தா என யுவன் போட்ட பீஜிஎம்கள் இன்றும் தமிழ் சினிமாவின் மாஸ் பீஜிஎம்கள். கடைசி சில அஜித் படங்களுக்கு யுவன் இசையமைக்காததால் அவரது ரசிகர்கள் வருத்ததில் இருந்தனர். ஆனால் அஜித் தற்போது அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்திற்கு யுவன் இசையமைப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனால் யுவன் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர். இப்போது அந்த படத்திலிருந்து யுவன் […]

Continue Reading

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு.. வைரமுத்து காட்டம்!

தான் சொல்லாத கருத்துக்கள் பொதுவெளியில் பரப்பப்படுவதாக பாடலாசிரியர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, “பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று […]

Continue Reading

புதிய திசைகளைத் திறக்கும் சாவி

எதார்த்த சினிமா வரிசையில் தமிழில் வரும் “சாவி” திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறக்கிறது. ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அறம் படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி துருதுருவென விழிகளுடன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே சாவி படத்தின் கதை. சாவி உங்களின் இதயங்களையும் திறக்கக்கூடும். “சாவி” திரைப்படத்தின் இயக்கனர் […]

Continue Reading

ரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்காவிலிருந்தும் ஆதரவு திரள்கிறது!

வாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் இது குறித்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் நிர்வாகிகள் டல்லாஸ் இர.தினகர், சிகாகோ ரஜினி ராஜா, ஃப்ரிஸ்கோ அன்புடன் ரவி, வாஷிங்டன் எஸ்.ஸ்ரீனிவாசன், டல்லாஸ் எம்.ஆனந்த், ஃப்ரிஸ்கோ என்.ராம்குமார், இர்விங் கே.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அன்புத் […]

Continue Reading