மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார்!

“சென்னையில் ஒருநாள் 2” படத்திற்குப் பிறகு நடிகர் சரத்குமார், “அடங்காதே”, “ரெண்டாவது ஆட்டம்”, “நல்லாசிரியர்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை மட்டுமல்லாமல் ஒரு புதிய படத்திலும் இப்போது நடிக்கவிருக்கிறார். “பாம்பன்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்டத் தோற்றத்தில் நடிக்கிறார் சரத்குமார். மேலும் இதுநாள் வரை அவருக்கு வழங்கப்பட்டு வந்த “சுப்ரீம் ஸ்டார்” என்ற பட்டத்தை “புரட்சித் திலகம்” என்று மாற்றியிருக்கிரார்கள் படக்குழுவினர். இந்தப் படத்தை கமெர்சியல் சினிமா எடுப்பதில் வல்லவரான இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். […]

Continue Reading

“சொல்லிவிடவா” – அர்ஜுன் ஓப்பன் டாக்!

‘ஜெய்ஹிந்த்-2’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘சொல்லிவிடவா’. தன் மகள் ஐஷ்வர்யாவை கதாநாயகியாக வைத்து இயக்கியிருக்கும் படத்தில், கன்னடத்தில் பல படங்கள் நடித்துள்ள சந்தன் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பற்றி நடிகர் அர்ஜுன் கூறும்போது, “இது பக்கா கமர்ஷியல் படம். மக்களுக்கு என்ன பிடிக்குதோ அதைக் கொடுக்கணும். இப்போ எல்லாரும் காமெடி எதிர்ப்பார்க்குறாங்க. அதனால, யோகிபாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் மாதிரியான ஆர்டிஸ்ட்களைப் படத்துல கொண்டுவந்தேன். அப்புறம், கதைக்கு என்ன […]

Continue Reading

கமல் ஜோடியாகிறாரா நயன்தாரா?

கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த டத்தின் அறிமுக நிகழ்ச்சியை தைவானில் நடத்தினார். கமலின் ‘இந்தியன்-2’ படத்தையும், ரஜினியின் ‘2.0’-வை தயாரித்துள்ள லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டால் கமலுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும். ‘இந்தியன்-2’ படத்தில் நயன்தாராவுக்கு புரட்சிப் பெண் வேடம் […]

Continue Reading

வெளிநாட்டவரை நெகிழ வைத்த பேரன்பு!

“கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்” மற்றும் “தரமணி” படங்களின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்திருக்கும் “பேரன்பு” படத்தை எடுத்து முடித்திருக்கிறார். வெளியாவதற்கு முன்பே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு எல்லோரது பாராட்டுகளையும் வாரிக் குவித்திருக்கிறது. கடந்த 28-ஆம்தேதி நெதர்லாந்தில் வெள்ளைக்காரர்கள் பெரும்திரளாக அமர்ந்திருந்த திரையரங்கில் ‘பேரன்பு’ திரைப்படத்தை […]

Continue Reading

அமலா பாலுக்கு கார் தரும் தொல்லை!

அமலா பாலுக்கு இது போதாத காலம் போல, ஒரு கார் வாங்கப்போய் அவர் நிம்மதி இழந்திருக்கிறார் இப்போது. கேரளா போலீஸ் வேகமாக அமலா பாலின் இந்த வரி ஏய்ப்பு வழக்கை விசாரித்து வருகிறது. அந்த விசாரனையில், வரி ஏய்ப்பு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களை கேரளா போலீசார் திரட்டியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்புகாகப் பாண்டிச்சேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அந்த முகவரியில்தான் காரைப் பதிவு செய்துள்ளதாகவும் அமலா பால் முன்னர் […]

Continue Reading

ஓயாத சிக்கல்.. தடை செய்யப்பட்ட பத்மாவத்!

பல போராட்டங்கள், பெரிய கலவரங்கள், உயிரிழப்பு என பலத்த சர்ச்சைகளுக்கிடையே பத்மாவத் திரைப்படம் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாகி, 4 நாள்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக மலேசியாவில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்து உள்ளது. இதுதொடர்பாக தணிக்கை வாரிய அதிகாரிகள் கூறுகையில், பத்மாவத் திரைப்படம் முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக […]

Continue Reading

சூர்யாவின் புதிய தோற்றம்.. படம் உள்ளே !!

சூர்யா எப்போதுமே மெனக்கெட்டு நடிக்கக் கூடிய ஒரு நடிகர். தான் ஏற்று நடிக்கக் கூடிய கதாபாத்திரத்திற்காக தன்னை மிகவும் வருத்திக் கொள்ளக் கூடியவர். சமீபத்தில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் மிகவும் சாதாரணமாக நடித்திருந்தார்.பல படங்களில் வித்தியாசமாய் பார்த்ததால் என்னவோ, இந்தப் படத்தில் சாதாரணமாக நடித்திருந்தது கூட வித்தியாசமாய் தெரிந்தது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தில் மீண்டும் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள உள்ளார். ஏழாம் அறிவு படத்தில் உள்ளது போல கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறுகிறார். […]

Continue Reading

மேலும் தாமதமாகிறதா 2.0 ரிலீஸ்!

ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக […]

Continue Reading

பிப்ரவரியில் வெளியாக இருக்கும் மனுசனா நீ

“H3 சினிமாஸ்” நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “மனுசனா நீ”. பிப்ரவரி வெளியீடாக வரவுள்ள “மனுசனா நீ” படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. “மனுசனா நீ” படத்தின் போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப் பேசாமல் கடந்து செல்வதில்லை. பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும். அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் […]

Continue Reading

கல்லூரி நிகழ்ச்சியில் கமல் பேச்சு

சாய்ராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன், “நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை; நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன். நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா? தவறை இன்றே சரிசெய்ய வேண்டும். நாட்டு நடப்புகளை தெரிந்துக்கொள்ள வேண்டிய மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள் அது உங்கள் கடமை; நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் […]

Continue Reading