கோதாவில் குதிக்கிறாரா விஜய்?

  ரஜினியா? கமலா? என்று தமிழகமே பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், சத்தமே இல்லாமல் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமிட்டு வருகிறார். அதாவது, உலகெங்கிலும் இருக்கிற தனது ரசிகர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறார் விஜய். அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றங்களில் இல்லாமல் சிதறிக் கிடக்கிற ரசிகர்களுக்கென்று “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் செயலி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ரசிகர்கள் நேரடியாக  தங்களை “விஜய் மக்கள் இயக்கம்” உறுப்பினராக்கிக் […]

Continue Reading

மத்திய அரசின் கடைக்கண் பார்வையும், பாராமுகமும் : கமல்

வருகிற 10-ந்தேதி அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்ட் பல்கலைக் கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் ‘தமிழகம்’ என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இதில் தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை எடுத்து கூறுகிறார். இதற்காக கமல்ஹாசன் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மத்திய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாகவே தமிழகம் புறக்கணிக்கப்படுவது சோகம் என்றாலும் இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பக்கம் சற்றே கடைக்கண் பார்வை […]

Continue Reading

காத்திருந்த இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி : அனுஷ்கா

அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தின. அதனைத் தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘பாகமதி’. இந்த படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். இந்த படம் தெலுங்கில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இது அதிக வசூல் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தமிழிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் அனுஷ்கா மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி கூறிய […]

Continue Reading

பூஜையுடன் தொடங்கிய திரு.வாக்காளர்!

1986 law Batch Media Productions  தயாரிக்கும் முதல் படமான திரு.வாக்காளர் பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின்  இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார்  ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.  இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி  உள்ளார்.   ​ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள்  நடிக்க உள்ளனர்.​     இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் எம்.ஜி.  […]

Continue Reading

மதுரைவீரனின் புதிய முயற்சி.. ஏற்குமா திரையுலகம்?

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சவால் தமிழ் ராக்கர்ஸ் தான். படம் வெளியான மறுநாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து, ஒரு தயாரிப்பாளாரின் ஒட்டுமொத்த உழைப்பையும் எங்கிருந்தோ நோகாமல் திருடிக் கொள்கிறார்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற கும்பல். இந்த இணையத் திருட்டை தடுப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் நிறைய முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், அதற்கு இதுவரையில் எந்த முழுமையான பலனுமே இல்லை.  இந்தத் தொல்லைக்கு புதிய முடிவை எடுத்திருக்கிறது “மதுரை வீரன்” படக்குழு. எப்படியெனில், படம் வெளியாகும் அன்றே ஆன்லைனிலும் […]

Continue Reading

புதிய வரலாறு படைக்கும் திரிஷா!

ஒரு நடிகையைப் பொறுத்தவரை திரையுலகிற்கு அறிமுகமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பதென்பது சாதாரண காரியமில்லை . அந்த வரலாறை உடைத்து இன்றும் ரசிகர்களுக்கு பிடித்த கதாநாயகியாக வவலம் வருபவர் திரிஷா மட்டும் தான். திரிஷா தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’, அரவிந்த் சாமியுடன் ‘சதுரங்க வேட்டை’, விஜய் சேதுபதியுடன் ‘96’ என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய இரு படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இந்த […]

Continue Reading

ஜீவாவின் புதிய படம் தொடங்கியது…

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி […]

Continue Reading

மீண்டும் உயிர்பெற்ற மஜித் மஜீதியின் நம்பிக்கை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் […]

Continue Reading

விஜய், ரஜினிக்கு அடுத்து சூர்யா!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைகா புரொடக்சன்ஸ் தான். விஜய் நடிப்பில் வெளியான “கத்தி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகிற்குள் தயாரிப்பாளர்களாக அடியெடுத்து வைத்தது “லைகா புரொடக்சன்ஸ்”. அப்போது லைகாவை தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் படியும், கத்தி திரைப்படத்தத் தடைசெய்யக் கோரியும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, ஒரு வெற்றிகரமான படத் தயாரிப்பு நிறுவனமாக இன்று கோலோச்சி வருகிறது “லைகா”. எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கைதி […]

Continue Reading

அடுத்த சர்ச்சை மலையாள சினிமாவில்..

ஒரு திரைப்படம் எடுத்து வெளியிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை இப்போதெல்லாம். அதுவும் உண்மையான வரலாற்றை படமாக எடுக்க நினைத்தால், அவ்வளவு தான் முடிந்தது கதை. சமீபத்தில் மெர்சல், பத்மாவதி என சர்ச்சைகள் தீயாய் பரவியது. அதிலும் பத்மாவதி ஒருபடி மேலே போய், பல மாநில அரசுகளே தடை செய்யும் அளவிற்குப் போனது. இந்த வரிசையில் ஒரு மலையாளப் படமும் இணைந்திருக்கிறது. இயக்குனர் கமல் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் “ஆமி” படத்திற்கு எதிராக கேரள உயர்நீதி […]

Continue Reading