திட்டமிட்டபடி காலாவை ரிலீஸ் செய்ய முயற்சி!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள காலா திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிட முயற்சி நடைபெறுகின்றன. பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், ரஜினி, ஹூமாகுரோசி, சமுத்திரக்கனி, நானா படேகர் பலர் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரல் 27ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால், தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, காலா படம் திட்டமிட்டபடி, திரைக்கு வருமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில் வர்த்தக சபையிலிருந்து காலா படம் தணிக்கை […]

Continue Reading

அருள்நிதியின் கவலை!!

ஸ்டிரைக் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நெருங்கிவிட்டது. இதுவரையில் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் நாளாக நாளாக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருமே கலக்கம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் அருள்நிதி தனது கவலையை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒட்டு மொத்த திரையுலகினரும் ஒன்றிணைந்து நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த ஸ்ட்ரைக் இவ்வளவு நாட்களுக்கு நீடிப்பது நல்லதல்ல. கேள்வி கேட்பது எளிதானது என்பது எனக்குத் தெரியும். […]

Continue Reading

“காலா” ரகசியத்தை உடைத்த திலீப் சுப்பராயன்!!

இயக்குநர் பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக நடிகர் ரஜினிகாந்தை இயக்கியிருக்கும் படம் “காலா”. இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது. சமூக வலைதளங்கள் முழுவதும் “காலா” டீசர் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் காலா திரைப்படத்தைக் காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிரார்கள். ஆனால், சினிமா உலகை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இந்த ஸ்டிரைக்கினால் “காலா” குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் மாபெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த […]

Continue Reading

13 வருட சினிமா அனுபவம் பற்றி ராய்லட்சுமி

‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. இந்தி வரை சென்றிருக்கும் இவர் திரை உலகில் காலடி வைத்து 13 ஆண்டுகள் ஆகின்றன. தனது சினிமா அனுபவம் பற்றி ராய்லட்சுமி, “பெரிய ஹீரோ படத்தில் அறிமுகமாகி, பிரபலமாக வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் 50-வது படத்தில் நாயகியை மையமாக வைத்து ஒரு கதையில் நடிக்க விரும்பினேன். நான் எதிர்பார்த்தப்படி கதை கிடைத்தது. எனவே தான் ‘ஜூலி-2’ படத்தில் […]

Continue Reading

விஜய்யை வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதும் உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மெர்சல் ரூ 250 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே.   தற்போது பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் என்பவர் ஒரு பேட்டியில் விஜய் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.   இதில் ‘விஜய்யை வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான், இது வேறு எந்த […]

Continue Reading

கைவிடப்பட்டதை கையில் எடுத்த மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அடுத்து மிஷ்கின் தயாரித்து நடித்த ‘சவரக்கத்தி’யும் நல்ல படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில், மிஷ்கினின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தணு நடிப்பதாகவும், ‘நானும் நந்தினியும்’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ ஆகிய படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்திற்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். […]

Continue Reading

என்னுடைய காதலனுக்கு நன்றி – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

நடிகைகளுக்கு சாதாரணமாக பட்ட பெயர்கள் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட நடிகர்களுக்கு இருக்கிறது, ஆனால் நாயகிகளுக்கு அவ்வளவாக இல்லை. தற்போதைய சினிமாவே வேறு, நாயகிகளும் நடிகர்களுக்கு இணையாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் படங்களை தாண்டி விருது விழாவுக்கு புடவை கட்டிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல். அப்படி […]

Continue Reading

சிவகார்த்திகேயனின் புது கெட்-அப்

பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக, ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 24 ஏ எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் கலை இயக்குநர் முத்துராஜ் சிவகார்த்திகேயன் நடிப்பில் […]

Continue Reading

புறக்கணிக்கும் ஹீரோக்கள்.. இயக்குநர்களுக்கு தூது விடும் ராதிகா ஆப்தே!!

சினிமா உலகினை பொறுத்தவரை கதாநாயகர்களைப் போல, நாயகிகள் எளிதில் பேசிவிட முடிவதில்லை. அப்படி எதாவது ஒரு நாயகி துணிச்சலாக தனக்கு நேர்ந்ததை பேசும் போது, அவரை முற்றிலுமாய் ஓரங்கட்டி ஃபீல்டை விட்டே விரட்டி விடுவார்கள். அப்படித் தான், ராதிகா ஆப்தேவின் நிலைமையும் இப்போது ஆகியிருக்கிறது.   சமீபத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்த ஒரு ஹீரோவை அறைந்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனால் அவர் மீது பல கதாநாயகர்கள் கோபத்தில் இருப்பதாகவும், தங்கள் படங்களில் அவர் வேண்டாம் […]

Continue Reading

எந்திரன்-2 பாணியில் இந்தியன்-2

தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். இதையடுத்து இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். […]

Continue Reading