வள்ளுவர் கோட்டத்துல கோலிவுட், டெல்லி போகுதாம் டோலிவுட்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவும் அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் – நடிகைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள். இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு திரையுலகினர் […]

Continue Reading

அஞ்சலி பாட்டீல் சொன்ன காலா ரகசியம்

ரஜினியின் ‘காலா’ படம் யு.ஏ. சான்றிதழ் பெற்று திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், இந்த படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.வி. பேட்டி ஒன்றில் ‘காலா’ படம் பற்றி அஞ்சலி பாட்டீல் அளித்த பேட்டியில்… “ ‘காலா’ ஒரு அரசியல் படம். இந்த படத்தில் […]

Continue Reading

நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் : சுஜா வருணி

நடிகர்கள், நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் படம் பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், ரசிகர்களுடன் பேசியும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகிறார்கள். ஆனால், நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்களைப் பதிவு செய்யும் போது அதற்கு சிலர் ஆபாச கமெண்ட்டுகளையும், அநாகரீகமாக புகைப்படங்களை பதிவு செய்தும் வருகிறார்கள். இதற்கு சில நடிகைகள் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை மற்றும் […]

Continue Reading

ரஜினி பட இயக்குநரின் அடுத்த படத்தில் தனுஷ்

‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘மெர்குரி’. இதில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து ரஜினி படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து இயக்குகிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத […]

Continue Reading

சாய் பல்லவியைச் சுற்றி புகையும் நெருப்பு!!

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அறிமுகமாகி, அதகளமான வரவேற்பைப் பெற்றவர் “மலர்”. சாரி, சாரி.. சாய் பல்லவி. ஒரே படத்தில் ஒரு நடிகையை ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் எளிதில் கிடைக்கிற காரியமில்லை. “பிரேமம்” மலையாள படமாகவே இருந்தாலும், இரண்டு மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், தமிழ் தெலுங்கு மலையாளம் என வேகமாக பிரபலமானது என்னவோ சாய் பல்லவி தான். யார் கண் பட்டதோ, “சாய் பல்லவியை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் அவரது […]

Continue Reading

விஜய்யின் 64-வது படத்தின் இயக்குநர்

நடிகர் விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை எச் வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் வெற்றிமாறன் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், இயக்குநர் ஹரி விஜய்யை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். […]

Continue Reading
விஜய் 62

விஜய் 62 படத்தின் கதை

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகிறது. படத்திற்கு பெயர் வைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அப்படத்தை விஜய் 62 என்று தான் கூறிவருகின்றனர். சினிமாவில் முழு ஸ்ட்ரைக் அறிவித்திருப்பதால் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இப்படத்தை கதை என்ன என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்த ஒரு கதையாம், பழ. கருப்பையா ஒரு கட்சியின் தலைவராகவும், ராதாரவி MLAவாகவும் நடிக்கிறாராம். ரசிகர்களின் கூட்டத்தை தவிர்க்க படத்தின் காட்சிகளை தமிழ்நாட்டை தாண்டி எடுக்க படக்குழு முடிவு […]

Continue Reading

ஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது : கமல்

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். தங்களது கட்சியின் முதல் வேலையே ஊழல் ஒழிப்பு தான், லோக் ஆயுக்தா மசோதாவில் தான் முதல் கையெழுத்திடுவேன், காவல் துறை சீரமைப்பு வாரியம் அமைக்கப்படும் என்றார். திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும் போது, “மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை, பாலிசி என்ன என்று கேட்கிறார்கள். மக்கள் நலம் தான் எங்கள் கொள்கை என ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆனாலும் திரும்ப திரும்ப […]

Continue Reading

ஐபிஎல் அறிமுக விழாவில் ஆட வரும் தேவி தம்பதி

11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐபிஎல் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் தினமும் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஐபிஎல்லில் இரண்டு வருட தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் […]

Continue Reading

ஸ்ரீலீக்ஸில் சேகர் கம்முலு

நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் கடந்த வருடம் தமிழ் பட உலகை உலுக்கிய சுசி லீக்ஸ் போன்று தெலுங்கு பட உலகை புதிதாக கிளம்பி உள்ள ஸ்ரீலீக்ஸ் ஆட்டிப்படைக்கிறது. தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி உள்ளார். முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் ஸ்ரீலீக்ஸில் வெளியானது. தொடர்ந்து பிரபல தெலுங்கு டைரக்டர் […]

Continue Reading