தமிழகத்தில் அல்லு அர்ஜுன் அனல் !

தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரை இட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. “அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு […]

Continue Reading

நயன்தாராவுக்கு நம்பிக்கை தந்த சமந்தா

நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு ரொம்பவே யோசிக்கிறார். ஒரு பிரபல கதாநாயகன் அளவுக்கு ‘மார்க்கெட்’ உருவாகி விட்டதால், இந்த எச்சரிக்கை. தென்னிந்திய திரையுலகின் முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்துடன் இருக்கும் அவர், அந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். வருகிற பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பதில்லை. தனக்கு பொருந்துகிற கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிப்பதால், “நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்” என்று […]

Continue Reading

ட்ரிபிள் ட்ரீட்டாக சிவகார்த்திகேயன் 13

திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்” என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது […]

Continue Reading

ஓவியங்களின் வழியே இரு கலாச்சாரங்களின் கூடல்.. தலைநகரில் ஒரு தமிழனின் சாதனை!!

மனிதன் கற்களால் ஆயுதங்களைச் செய்து வேட்டையாடத் தொடங்கிய காலத்தினூடே  இன்னொன்றையும் செய்யத் தொடங்கியிருந்தான், அதுதான் சித்திரம் தீட்டுதல். குகைகளையே இருப்பிடமாகக் கொண்டிருந்தவன், பாறைகளில் கிறுக்க ஆரம்பித்த கோடுகள் தான் உலகின் முதல் மொழியாக இருக்க முடியும். இசையை எவ்வாறு மதம், மொழி இவற்றைக் கொண்டு பிரிக்க முடியாதோ, அதே போல ஓவியங்களையும் ஒரு எல்லைக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அது கண்டங்கள் தாண்டிப் போனாலும், யுகங்கள் நூறு ஆனாலும் காண்போரின் மனதோடு பேசும், உறவாடும். அப்படித்தான் உலகின் […]

Continue Reading

எனக்கு அந்த வேடம் பொருத்தமாக இருக்காது : அதிதி ராவ்

தமிழ், இந்தி, மலையாளப் படங்களில் நடித்து வருபவர் அதிதிராவ். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். தனது திரையுலகப் பயணம் பற்றி பேசிய அதிதிராவ், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பது தனி அனுபவம். நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். இதுபற்றி கவலைப்பட வேண்டியது தயாரிப்பாளர்கள் தான். மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. சம்பளத்தை விட நல்ல படங்களுக்கு […]

Continue Reading

தெருவில் வசிக்கும் மகள், கண்டுகொள்ளாத ஜாக்கிசான்

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் 1998-ம் ஆண்டு ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இவர்களுக்கு பிறந்த மகள் எட்டா சோக் லாம் (18). இதை ஜாக்கிசான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தாயுடன் வசித்து வந்த எட்டா சோக் லாமை காணவில்லை என்று அவருடைய தாய் எலைன் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் எட்டா சோக்லாம் நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என பகிரங்கமாக அறிவித்தார். தனது தோழி ஆன்டி […]

Continue Reading

நடிகை மடோனா விற்கு என்னதான் ஆச்சு?

பிரேமம் படத்தில் செலின் ரோலில் நடித்து அதிக பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். அதன் பிறகு தமிழில் அவர் சில படங்களில் நடித்தார். இவர் வசம் தற்போது ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே உள்ளது. மடோனா தற்போது விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவர் களையிழந்த முகத்துடன் மிக சோகமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொசுக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது முகம் அப்படி பாதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

கவர்னரை சந்தித்த தமிழ்த் திரையுலகத்தினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தமிழ் சினிமா துறையினர் சார்பில் கடந்த மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள், பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் இதில் பங்கேற்றனர். போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை […]

Continue Reading

ஐஸ்வர்யா ராயுடன் தகராறு குறித்து அபிஷேக் பச்சன்

காதல் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இப்போது ஐஸ்வர்யாராய் அதிக படங்களில் நடித்து வருகிறார். அபிஷேக் பச்சனுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது. இருவருக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்றும், வீட்டில் தனித்தனியாக வசிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்தன. ஐஸ்வர்யாராயுடன், மாமியார் ஜெயாபச்சனும் அடிக்கடி தகராறு செய்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் கைகோர்த்தபடி ஜோடியாக […]

Continue Reading

படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு – விஜய் சேதுபதியின் “நண்பேண்டா”!!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் திரைப்படம் “செக்கச் சிவந்த வானம்”. இதில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உட்பட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் கலந்து கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு […]

Continue Reading