காவியனுக்கு போட்டியாக “சர்கார்”!

“2 M சினிமாஸ்” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் “காவியன்”. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் “அமெரிக்காவின் சூதாட்ட நகரம்” என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும். இரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் […]

Continue Reading

கலைஞருக்கு இசைஞானியின் அஞ்சலி!!

திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நேற்று முன்தினம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது நினைவிடத்தில் திமுக தொண்டர்கள்,அரசியல்வாதிகள்,திரைபிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே என, ஆஸ்திரேலியாவிலிருந்து இசைஞானி இளையராஜா வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார். “டாக்டர் கலைஞர் ஐயா மறைந்த இந்த தினம் ஒரு துக்ககரமான தினம். அரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் […]

Continue Reading

ரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்த ரம்யா நம்பீசன், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம். கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று […]

Continue Reading

“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது?

நடிகர் விஜய் தற்போது “சர்கார்” படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாக தொடங்கியது. “ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட்” தயாரிக்க இருக்கும் அந்தப் படம் பற்றிய இன்னொரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க “எம்.எஸ்.தோணி”, “பரத் அனே நேனு” படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக […]

Continue Reading

பட பூஜையில் வளைகாப்பு விழா.. வித்தியாசம் காட்டிய படக்குழு!!

“ரைட்டர் இமேஜினேஷன்ஸ்” தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் “நான் செய்த குறும்பு”. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிள்ளையார் கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது . வேத […]

Continue Reading

மீண்டும் அமெரிக்காவில் தேவி ஸ்ரீ பிரசாத்.. சஸ்பென்ஸ் & திர்ல்லிங் உறுதி!!

ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், சீயான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது. இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது,‘ ராக் ஸ்டார் டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் […]

Continue Reading

“எங்களை சமூகவிரோதி , பொறுக்கிகள் என்று சொன்னாலும் கவலையில்லை” ; சுரேஷ் காமாட்சி

“KNR மூவிஸ்” சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் “பொறுக்கிஸ்”. பொறுக்கிஸ்க்கு கீழே “அல்ல நாங்கள்” என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. “பிசாசு”, “சவரக்கத்தி” படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S இப்படத்தின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் […]

Continue Reading

சினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா ? – மன்சூர் அலிகான் விளாசல்!!

“தெரு நாய்கள் ” படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய “ஐ கிரியேஷன்ஸ்” படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது “படித்தவுடன் கிழித்து விடவும் “. “தெரு நாய்கள் ” படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை , சாலி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் திரையுலக வி.ஐ.பிகள் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடந்தது . […]

Continue Reading

‘அண்ணனுக்கு ஜே ‘ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

“அண்ணனுக்கு ஜே” திரைப்படத்தை வெற்றிமாறனின் “கிராஸ் ரூட் பிலிம்” கம்பெனியும் , “பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ” நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ளார் .இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.மேலும் ராதாரவி ,மயில் சாமி ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் G .B வெங்கடேஷ் […]

Continue Reading

மாரி 2 படத்தில் தனுஷுடன் கைகோர்த்த அகில இந்திய பிரபலம்!!

நடிகர் தனுஷ் தற்போது “மாரி 2” படத்தில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா – தனுஷ் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ், “அவரது நடனைத்தை சிறு […]

Continue Reading