சத்தமே இல்லாமல் கலைப்புலி எஸ். தாணு எடுத்து முடித்த படம்!!

பிரமாண்டத்திற்கு பெயர்போன தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு படம் தயாரிக்கிறார் என்றாலே அதை மிகப்பெரிய அறிவிப்பாக வெளியிடுவார்.. ஆனால் எப்போது இந்தப்படத்தை தயாரித்தார் என எந்த சத்தமும் காட்டாமல் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் “60 வயது மாநிறம்” என்கிற படத்தை தயாரித்துள்ளார். இதோ இந்தப்படம் இப்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பாராட்டியது பெருமைக்குரியது. “60 […]

Continue Reading

விஷாலின் முக்கிய அறிவிப்பு…

நடிகர் விஷாலின், “விஷால் பிலிம் பேக்டரி” மற்றும் “பென் ஸ்டுடியோஸ்” இணைந்து தயாரித்துள்ள படம் ‘சண்டக்கோழி 2’. இதில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் இறுதியாக எடுத்து முடிக்கப்பட்டவை. இந்நிலையில் படம் குறித்த முக்கியமான […]

Continue Reading

திருடப்பட்ட விஜய்யின் வாக்குரிமை…

“மெர்சல்” தந்த அதிரிபுதிரியான வெற்றையைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் “சர்கார்”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கடைசியாக அமெரிக்கா சென்ற படக்குழு அங்கு லாஸ் வேகாஸ் நகரத்தில் பாடல் காட்சியை படமாக்கி விட்டு திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தின் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் ஏகபோகமாக இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் “சர்கார்” படத்தின் கதை […]

Continue Reading

நிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு!!

திரிஷா நடிக்க வந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன. தமிழ், தெலுங்கு உட்பட இருக்கிற அத்தனை முன்னணி கதாநாயகர்களுடனும், இளம் கதாநயகர்களுடனும் சேர்ந்து நடித்து விட்டார். ஆனால், இதுவரையில் ரஜினி ஜோடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவேயில்லை. இதனால், அது பெரும் ஏக்கமாகவே மாறிப்போனது. எந்த பேட்டி என்றாலும் திரிஷா இதனை குறிப்பிட்டு பேசுவார். ஒருவழியாக அவரது ஏக்கம் தீரும் நேரம் வந்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷாவும் நடிக்க […]

Continue Reading

“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3

“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் “உரு” மற்றும் “எழுமின்” படத்தைத் தொடர்ந்து மூன்றாவது படமாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் V.P. விஜி தயாரித்து இயக்கும் மிக பிரம்மாண்டமான திரைப்படம் தயாராகிறது . சமீத்தில் தாய்லாந்து குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட சிறுவர்கள் மழை நீரில் மாட்டிக் கொண்டதும், அவர்களை மீட்க 17 நாட்கள் மீட்புக் குழுவினர் போராடியதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று […]

Continue Reading

மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..

  “காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்” என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் “ஜுலை காற்றில்”. இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை திரைக்கதை அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே சி சுந்தரம்.இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அனுசரண் படத்தொகுப்பை […]

Continue Reading

பாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்!!

மாணவர்களுக்கு எழுச்சி கொடுக்கும் வகையில் “எழுமின்” திரைப்படத்திற்காக சிறப்பாக உருவான “எழு எழு” என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடலுக்கான ஐடியாவை சொல்லும் போதே, “இப்பாடலை நீங்கள் தான் எழுத வேண்டும்” என்று நடிகர் விவேக்கிடம் கூறியுள்ளார் இயக்குநர் வி.பி.விஜி. அதனை ஏற்று சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும்படி நடிகர் விவேக்கும் பாடல் வரிகளை மிகவும் சிரத்தையுடன் எழுதியுள்ளார். பாடல் வரிகளை எழுதி முடித்தவுடன் இப்பாடலுக்கு அனிருத்தின் குரல் மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்பது நடிகர் விவேக்கின் […]

Continue Reading

கலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்!!

கடந்த 7-8-2018 அன்று மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் ஒன்றுதிரண்டு, சென்னை காமராஜர் அரங்கில்13-8-2018 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் நினைவஞ்சலி செலுத்தினார்கள். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள்,தயாரிப்பாளர்கள், கருணாநிதி குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நினைவஞ்சலி நிகழ்வில் நடிகர் […]

Continue Reading

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்!!

“எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட்” சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். நாயகன் துருவாவின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் அடித்துள்ளார். மற்றும் மனோபாலா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள […]

Continue Reading

கிருஷ்ணாவின் “திரு குரல்”!

‘தீதும் நன்றும்’ படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘திரு.குரல்’. அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். […]

Continue Reading