மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி .

    மார்ச் 24ம் நாள் உலக  காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி  இன்டர்நேஷனல் சார்பில்  சென்னை ஆர்.கே நகரில்  (மார்ச்21ம் நாள்)  இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.இந்த ரோட்டரி  இன்டர்நேஷனல் முதலில் போலியோ நோய்க்கான விழிப்புணர்வு நடத்தி அதில் மாபெரும் வெற்றியும் பெற்றது        தற்போது டிபி எனப்படும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே 2004 ஆண்டு முதல்  உருவாக்கி சுமார் 60ஆயிரம் பேருக்கு […]

Continue Reading

மீண்டும் இணையும் சிபி சத்யராஜ் மற்றும் தரணிதரன்!

  கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் எந்த ஒரு நடிகருக்கும் அது ஒரு ‘பாதுகாப்பான பந்தயம்’ என்பதை தாண்டி, ‘வலுவான பந்தயம்’ என்று சொல்லலாம். அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வெற்றியை பெற்று வருகிறார். அவரது முந்தைய படங்கள் இதை நிரூபித்திருக்கின்றன. அடுத்து வெளிவர இருக்கும் ‘மாயோன்’ உட்பட அனைத்து படங்களும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி உள்ளன. ஆர்வத்தை தூண்டும் கதையில் உருவாகியுள்ள அவரது ரங்கா படம் அடுத்து வெளிவர இருக்கும் நிலையில், […]

Continue Reading

மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்‘ “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.    விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர்.    அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.  பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களைசந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.  அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்சத்தீஷ்வரன்.  இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாக“ஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில்நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல்  தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன். நடிகர் நடிகையர்: ஜெய்குமார், ஜெனிபர்,  மாஸ்டர் ஆகாஷ், பாலாசிங் கிருஷ்ணமூர்த்தி  வீரசமர், கிரண், , பாவா லெட்சுமணன்    தொழில் நுட்ப கலைஞர்கள்:  ஒளிப்பதிவு                     : C.T.அருள் செல்வன்     இசை                                   : S M பிரசாந்த் படத்தொகுப்பு               : K.R.செல்வராஜ்,        பாடல்கள்          […]

Continue Reading

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் “கருத்துக்களை பதிவு செய் ராகுல் இயக்குகிறார்

M பிக்சர்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும்   “ கருத்துக்களை பதிவு செய் ”என்ற படத்தை தயாரிக்கிறது.. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான். ஒளிப்பதிவு        –        மனோகர் இசை                    –  […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியல் பேசும் மதுபாலா

அக்னி தேவி படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் மதுபாலா, தற்போது தமிழ்நாட்டு அரசியல் பற்றி அப்படத்தில் பேசியிருக்கிறார் ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இதில் மதுபாலா பேசும் […]

Continue Reading

ஆதி ஹன்சிகா இணையும் பார்ட்னர்

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும்.      RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பார்ட்னர்” என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் ‘மகா’ நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் […]

Continue Reading

அவருடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி – சூர்யா

சூர்யா நடிப்பில் தற்போது இரு படங்கள் தயாராகி வருகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் காப்பான் படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்க மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக மோகன்லாலின் முகநூல் பக்கத்தில் இருந்து லைவ் வீடியோ […]

Continue Reading

சரண் – ஆரவ் கூட்டணியில் இணைந்த ராதிகா

`ராஜ பீமா’ படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.     மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]

Continue Reading

இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை

  பலகோடிகளில் சம்பளம் வாங்குகிற டாப் ஸ்டார்களின் படங்களே வசூலுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும் சூழலில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது.     இந்தியாவில்  இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி  ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து […]

Continue Reading