full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி .

 
 
மார்ச் 24ம் நாள் உலக  காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி  இன்டர்நேஷனல் சார்பில்  சென்னை ஆர்.கே நகரில்  (மார்ச்21ம் நாள்)  இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.இந்த ரோட்டரி  இன்டர்நேஷனல் முதலில் போலியோ நோய்க்கான விழிப்புணர்வு நடத்தி அதில் மாபெரும் வெற்றியும் பெற்றது
 
 
 
 தற்போது டிபி எனப்படும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே 2004 ஆண்டு முதல்  உருவாக்கி சுமார் 60ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களை கண்டெடுத்து சிகிச்சை அளித்து வருகிறது .இன்று சென்னை ஆர் கே நகர் பகுதியில் முகாம் நடத்தி சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது காசநோய் என்பது ஒன்று தீண்டாமை நோய் அல்ல தொற்று நோய்தான் இதை முழுவதுமாக குணமாக்க முடியும் எனவே அதன் அறிகுறிகளான தொடர் காய்ச்சல், மூன்று வாரத்திற்கு அதிகமான இரும்பல்,சளியுடன் கலந்து இரத்தம் வந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள்…
 
 
இந்த காசநோய் இந்தியாவிலிருந்து   முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும் என இசாமுதீன் பாப்பா தெரிவித்தார். 
இதை ரோட்டரி இண்டர்நேஷனல் சார்பில் ரோட்டரி இந்தியா டிபி கன்ரோல் புரோகிராம் என்ற அமைப்பும் ரோட்டரி டிஸ்ரிக் 3232 ரோட்டரி கிளப் மெட்ராஸ் சௌத் வெஸ்ட் மற்றும் சென்ரல் சேர்ந்து நடத்தியது டாக்டர் இசாமுதீன் பாப்பா தலைமையில் நடிகர் ஆரி முன்னிலையில்  இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது