நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை இயக்கும் பிரபல இயக்குனர்

நயன்தாராவை வைத்து வெற்றி படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் அடுத்ததாக சமந்தாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா, நயன்தாரா கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.  கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு […]

Continue Reading

லண்டனில் இருந்து புதிய படத்தை தொடங்கும் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை லண்டனில் இருந்து தொடங்குகிறார். தனுஷ் நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து துறை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 60 […]

Continue Reading

உடல் எடையை கூட்ட பல முயற்சிகள் செய்யும் கங்கனா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக உடல் எடையை கூட்ட பல முயற்சிகள் எடுத்து வருகிறார். அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டினார். அனுஷ்காவுக்காகவே பாகுபலி 2-ம் பாகம் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்து பின்னர் எடுத்தார் ராஜமவுலி. அப்போதும் உடல் எடை மெலியாததால் அனுஷ்கா நடித்த காட்சிகளை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் மெல்லிய தோற்றமாக மாற்றி அமைத்தனர். அனுஷ்காவின் நிலைமை தற்போது கங்கனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. […]

Continue Reading

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “

  ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “ இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  – M.P.சிவகுமார் இசை  – பாலகணேஷ் எடிட்டிங்  –  G.V.சோழன் விளம்பர வடிவமைப்பு  – அயனன் தயாரிப்பு – ஜெமினி ராகவா இணை தயாரிப்பு – க.முருகானந்தம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  K.S.முத்துமனோகரன் படம் […]

Continue Reading

உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா

ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், “விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் […]

Continue Reading

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா

பிரபல இயக்குனர் இயக்கும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க இருப்பதாக பரவி வந்த செய்தி வதந்தி எனக்கூறி ராணா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் அண்மையில் ராஜராஜ சோழன் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் 3 ஹீரோக்களை வைத்து மல்டி ஸ்டார் படம் இயக்க உள்ளதாகவும், அதில் ராணா, ஆர்யா, சத்யராஜ் நடிக்க இருப்பதாக்கவும் செய்திகள் பரவின. இந்நிலையில், ராணா இந்த தகவலை […]

Continue Reading

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனின் சுந்தரபாண்டியன் சென்டிமென்ட்

தற்போது சசிகுமாரை வைத்து கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி இருக்கும் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு சுந்தரபாண்டியன் படத்தின் சென்டிமென்ட் அமைந்திருக்கிறது. ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி […]

Continue Reading

பண மோசடி வழக்கு- நடிகை மீரா மீதுனுக்கு போலீஸ் சம்மன்

பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை மீரா மீதுனுக்கு போலீஸ் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. நடிகை மீரா மீதுன் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் பணமோசடி புகார் அளித்திருந்தார். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேனாம்பேட்டை போலீசார் மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 19-ந்தேதி விசாரணைக்காக தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி […]

Continue Reading

நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார். காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தில் வில்லன் […]

Continue Reading

மீண்டும் இணையும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி

தமிழில் முன்னணி ஹீரோவான தனுஷ் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படம் உட்பட 4 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். […]

Continue Reading