வறுமையில் இருக்கும் நந்தகோபாலுக்கு உதவிய நடிகர் சவுந்தரராஜா

சுந்தரகாண்டம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நந்தகோபால், தற்போது வறுமையில் இருப்பதை அறிந்து நடிகர் சவுந்தரராஜா உதவி செய்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா, நந்தகோபால், பிளாக் பாண்டி கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், ‘டேய்… சண்முகமணி’ என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர். தற்போது இவர் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நடிகர் சவுந்தரராஜா உதவி செய்திருக்கிறார். […]

Continue Reading

புதிய அவதாரம் எடுக்கும் டேனியல் பாலாஜி

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகரான டேனியல் பாலாஜி, புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக […]

Continue Reading

இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும்  “தோழர் வெங்கடேசன்”

காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன். இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்ற காட்சிகளை  பல கோணங்களில் ட்ரான்தொழிட்நுட்பத்துடன் காட்சி படுத்தியுள்ளனர்,   திருப்புமுனை கிராபிக்ஸ் காட்சியை மோஷன் கண்ட்ரோல் காமிரா உதவியுடன் படமாக்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது. வேதா செல்வம் ஒளிப்பதிவு பொறுப்பை  ஏற்றுகொள்ள, இசை அமைப்பாளராக சகிஷ்னா அறிமுகமாகிறார். இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு, ராஜேஷ் கண்ணாவோடு இணைந்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குனர் மகாசிவன். நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்: அறிமுக நாயகன்: அரிசங்கர் அறிமுக நாயகி: மோனிகா சின்னகொட்லா தயாரிப்பு: மாதவி அரிசங்கர் படத்தொகுப்பு: மகாசிவன் & ராஜேஷ் கண்ணா ஒளிப்பதிவு: வேதா செல்வம் இசை: சகிஷ்னா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம்: மகாசிவன்

Continue Reading

தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்து வருகிறது.  தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படமும் வெற்றிக்கான உத்திரவாதத்தோடு வளர்ந்து வருகிறது. மேலும் தெலுங்கில் விஜய் […]

Continue Reading

ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தனது இசை பயணத்தை  தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி […]

Continue Reading

சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2

  திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ்’  சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’ ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில், திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். முண்டாசுபட்டி மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை – இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் பி கார்த்திக் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். […]

Continue Reading

பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

எம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் […]

Continue Reading

லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. […]

Continue Reading

கலைப்புலி தாணுவுக்கு இன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ். 

  திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவுக்கு இன்று (25.06.2019) பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கு தமிழ் திரையுலகமே நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறது. கலைப்புலி தாணுவுக்கு இன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ். நாக் ஸ்டுடியோ நிர்வாகி கல்யாணமும் கலைப்புலி தாணுவுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.

Continue Reading

அசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி…’ என்ற பாடலை நடிகர் […]

Continue Reading