மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர் !!

  புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45-வது துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, […]

Continue Reading

அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்

அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த  ஏராளமான தீயணைப்பு […]

Continue Reading

மகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார். நான் பாடல் எழுத  வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார். அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார். இசையமைப்பாளர் தமன் பேசும்போது, “நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லை. அவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. வெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது. அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன். ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். இந்துஜா, மகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார். படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,  “பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது. இங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.   நடிகை ரோகிணி பேசும்போது, “என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன். நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள். அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது. இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார். ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசும்போது,  “இது எனது முதல் படம். இப்படிப்பட்ட ஒரு படம் என் முதல் படமாக அமைந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்எனது நன்றிகள். 57 நாட்களில் 47 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது. இது எனது உதவியாளர்களின் உதவியால்தான் சாத்தியமானது…” என்றார். நடிகை இந்துஜா பேசும்போது, “சாந்தகுமார் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர் ஒரு தூய்மையான படைப்பாளி. இது ஒரு வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒரு அனுபவம். எனது அடுத்தநன்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு. மூன்றாவது நன்றி ஆர்யாவுக்கு. அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்த்து. மஹிமா ஒரு அழகான க்யூட்டான நடிகை. இந்தப் படத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…” என்றார். நடிகை மஹிமா நம்பியார் பேசும்போது,  “இந்த மகாமுனி படத்தில் ஒரு பங்காக நானும் இருந்ததை நினைத்துப் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நிச்சயமாகவருத்தப்பட்டிருப்பேன். நானே என்னை இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், சாந்தகுமார் ஸார் அப்படியொரு கதாபாத்திரத்தைஎனக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. இது என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் ஒன்று. இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் வேலை செய்வது எனக்கு மிகவும்வசதியாக இருந்தது. இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும் சமயத்தில் ஜெயசுதா மேடம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்யா எதைப் பற்றியும்கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பின்பு அவர் ஒரு கடின, அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர்என்பது தெரிந்தது. ஒரு காட்சியைப் படமாக்கும்போது 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவேதயாராக நிற்பார். இந்தப் படத்தினால் அவருக்குக் கிடைக்கப் போகும் அனைத்து பாராட்டுக்களுக்கும் தகுதியானவர் ஆர்யா. இயக்குநர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். […]

Continue Reading

லவ் குருவாக மாறிய மொட்ட ராஜேந்திரன்

’’ நானும் சிங்கள் தான் ’’   ரோமேண்டிக் காதல்,காமேடி கலந்த படம். இந்த  திரைப்படத்தை இயக்குகிறார், புது முக இயக்குனர்  ரா. கோபி. கதா நாயகனாக அட்டகத்தி தினேஷ், கதா நாயகியாக தீப்த்தி ஷெட்டி  நடித்துள்ளனர். இதில்மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடி நடிகராக நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாக நடித்து இருந்தாலும் , இதில் இவர்  ஒரு ரோமேண்டிக் காமிடியனாக வருகிறார்.  லண்டன் வாழ் தமிழனாக FMஸ்டேஷ்சனில்  ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம். MR. LOVE என்ற பெயரில்  காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன்  லவ் குரு. காதலை சேர்த்து வைப்பறக்கு , காதல் தோல்வியில் விரைத்தி அடைந்தவர்களுக்கு , முகிகயமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற  ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE  வாக கலக்கி இருக்கிறாம். தினேஷ்வுடன்   சேர்ந்து  காமெடியில் பட்டைய கிளப்பி , வெளுத்து வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒரு கூட்டம் உடையவர் , ஒரு R J  வாக பார்ப்பது புதிதாக இருக்கும் என படக்குழு கூறுகின்றனர்.. கட்டயாமாக   நமது 90’ஸ் சிங்களுடன், 60’ஸ் சிங்களின் ஆட்டம் வெகுவாக  நம்மை கவரபோகிறது….

Continue Reading

சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில்  நடிக்க இருக்கும் புதியபடம் !!

தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு  படத்தின்  அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம்  மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள் இதுவரைக்கும் உள்ள சந்தானம் காமெடிகளில் இது அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார், இவர் அறம், குலேபகாவலி, […]

Continue Reading

ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு.

  வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா  இன்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது, “எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறியபடம் பெரியபடம் என்றில்லை. எல்லோரும் ஒரேப்போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி […]

Continue Reading

திகிலும் காமெடியும் கலந்த படம் “ மல்லி “  

முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “ ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். ஒளிப்பதிவு     –     PKH தாஸ் இசை           –     பஷீர் பாடல்கள்       –     சிதம்பரநாதன், பாண்டிதுரை எடிட்டிங்        –     B.S.வாசு நடனம்         –     நாகேந்திர […]

Continue Reading

தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ்

7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார். 2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா […]

Continue Reading

கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில்,  சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் ‘தேடு

கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் இப்படம், முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதை களத்துடன் ரசிகர்களை ஈர்க்க தயாராகி வருகிறது. இணைய தலைமுறை திரைப்படத்தை இயக்கிய சுசி. ஈஸ்வர் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, ‘உறுதிகொள், வீராபுரம்’ ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார். மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி […]

Continue Reading

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி

‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு […]

Continue Reading