தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி – இயக்குநர் அபிலேஷ்

இளைஞர்கள் என்றாலே ஏதாவது ஒரு துறையில் கால் பதித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைகளும், கனவுகளும் இருக்கும். அதிலும், சினிமாத் துறை என்றால் கேட்கவே வேண்டாம், ஆசைகளும், கனவுகளும் நிறையவே இருக்கும். இருப்பினும், அதில் சிலர் தான் வெற்றிபெற்று நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். அதில், அமெரிக்காவில் உள்ள கேன்ஸஸ் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை அபிலேஷ் இயக்கிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் பெற்றிருக்கிறது. அபிலாஷ் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சி.எஸ். […]

Continue Reading

*வெற்றிக்களிப்பில் மயூரன் தயாரிப்பாளர்கள்*

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி வரவில்லலை,  சாஹோ வெளியாவதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்று எக்கச்சக்கமான சிக்கலில் சிக்கி இருந்த மயூரன் திரைப்படம் வெற்றிகரமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 22 தியேட்டர்களிலும், தமிழகம் முழுவதுமாக மொத்தம் 72 தியேட்டர்களிலும் ரிலீஸ்  ஆனது ஒரு  பக்கம் மகிழ்ச்சி என்றால், பெரிய படங்களுக்கு நடுவில் வந்து மயூரன் மக்கள் மத்தியில் நல்லபடம் என்ற பெயரை வாங்கி இருப்பதோடு […]

Continue Reading

மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம்

சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்தார். ‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் […]

Continue Reading

உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’ | அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார்

உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், பல்வேறு காரணங்களால் வெகுவேகமாக அழிந்து வரும் கலையான கட்டைக்கூத்தை மையமாக கொண்டது. ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமானத் திரைப்படம். இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சினேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக  நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். மேலும் கே […]

Continue Reading

ப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்

‘தாதா 87’ படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா […]

Continue Reading

டிக்கிலோனா என்ற டைட்டிலுக்கு கிடைத்த அமேசிங் ரெஸ்பான்ஸ்!!

  திரையில் நடிகர் சந்தானத்தைப் பார்க்கும் போதே ஒரு கலகலப்பு கலந்த வைப்ரேசன் மனதுக்குள் பரவும். தனது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பேமிலி ஆடியன்ஸுக்கும் பிடித்த வகையில் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் டிக்கிலோனா. இந்த டிக்கிலோனா என்ற தலைப்பிற்கு நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் மிகப்பெரிய வரலாறையே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக 80-கிட்ஸ், 90-கிட்ஸ் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு பெயர் டிக்கிலோனா. பெயரிலே இப்படி காமெடியை […]

Continue Reading

*”சிறப்பு இணையதள முகவரியை வெளியட்டார் நடிகர் சூர்யா*

*60 ஆண்டுகளைத் தொடும் கமலஹாசனின் கலைப் பயணம் !*தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் கமலஹாசனின் கலையுலகப் பயணம் 60 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் , அதனை கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள www.ikamalhaasan.com என்ற இணையதளத்தை நடிகர் சூர்யா இன்று மாலை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டார்.மேலும் , நடிகர் கமலஹாசனின் பெருமை பேசும் இந்த இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி ஒரு ரசிகனாக தான் கர்வம் கொள்வதாகவும் நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

Continue Reading

வாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் :நடிகர் அப்புகுட்டி

விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகி இருக்கும் ‘வாழ்க விவசாயி ‘படம் தன்னை வாழவைக்கும் என்று நடிகர் அப்புகுட்டி  கூறுகிறார்.  இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்கவிவசாயி’.விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது .மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம்சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி .படம் பற்றிய அனுபவங்களைப் பெருமையுடன் அப்புக்குட்டிஇங்கே பகிர்ந்து கொள்கிறார் இப்படி “எனக்கு அழகர்சாமியின் குதிரை’ படம்  பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது.நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று  முடிவு செய்து கொண்டேன்.இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒருகதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது . அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது .எனக்கு மிகவும்பிடித்த கதை .நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை.    இயக்குநர்  P.L.பொன்னிமோகன்  சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா? இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர்வேண்டுமே. அப்படி ஒரு  நல்ல தயாரிப்பாளராக  பால் டிப்போ கதிரேசன்  கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார்.படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார் . ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும்விவசாயம் தெரியும். நாற்று நடுவது ,களை எடுப்பது, கதிர் அடிப்பது , அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும்சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது .” என்றார். அப்புகுட்டி தன் படத்தின் கதாநாயகி பற்றிக் கூறும்போது , “கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது .உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது .யார் கதாநாயகி ?அவர் எப்படி இருப்பார்? என்பது தான் அது .ஏனென்றால் என்உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு.  நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது .அவர் என்னை விட உயரமாக இருப்பாரே .என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை .  அவர்’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது ‘பேராண்மை’யிலும் நன்றாக நடித்திருந்தார் .ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்ததுஎல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது .அவர் உயரம் தெரியாத படியும் நிறம் தெரியாத படியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாகநடிக்க வைத்துவிட்டார்கள் . வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை .அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும்  இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும். தன்னால்முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்கிறார். கதையின்படி எனக்கு  இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை .வினோத்,சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள் “என்றவர் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார் . “ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆர்ட்டைரக்டர் அந்தப் பரணைநன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது .பாண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட  இருந்தது. முதலில்  அதில் நான் ஏறினேன்.அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண்  சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும்இருந்தது. ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன் . தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால் நீங்கள் “நல்ல வேளை என்னை காப்பாற்றிவிட்டீர்கள். நான்  உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந் நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்” என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது . இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். ‘வாழ்க விவசாயி ‘படம் என்னை வாழ வைக்கும்  படமாக இருக்கும் என்றுநம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒருபடமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றுகூறினார் பெருமையாக . நடிகர்கள் அப்புக்குட்டி, வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி மற்றும் விஜயன், கராத்தே கோபாலன் எழுத்து இயக்கம்  – P.L.பொன்னிமோகன், இசை – ஜெய்கிருஷ்.K, ஒளிப்பதிவு –  K.P.ரதன் சந்தாவத், படத்தொகுப்பு – பா.பிரவின் பாஸ்கர், கலை –  R. சரவண அபிராமன் B.f.a, நடனம் – காதல் கந்தாஸ், பாடல்கள் – யுகபாரதி, மணி அமுதவன், தமயந்தி, ஒலிக்கலவை G.தரணிபதி d.f.t,  மக்கள் தொடர்பு – சக்தி சரவணன் தயாரிப்பு “பால்டிப்போ”K.கதிரேசன்

Continue Reading

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும்   “ரேஞ்சர் “

திரையுலகில் மதிக்கத்தக்க படைப்புகளை தயாரித்தும், விநியோகித்தும், நன்மதிப்பை பெற்ற நிறுவனமான ஆரா சினிமாஸ் தன் அடுத்த படைப்பை தொடங்கியுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி தயாரிப்பில்  சிபிராஜ் நடிப்பில்  “ரேஞ்சர்” படம் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது. “ஆவ்னி” எனும் புலி பல  மனிதர்களை உயிருடன் அடித்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையை கிளப்பியது.   மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டதில் நடைபெற்ற இந்த  உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் தான் “ரேஞ்சர்” “பர்மா” , […]

Continue Reading

யோகிபாபு , கருணாகரன் இணையும் “ட்ரிப்” அட்வெண்ஞ்சர் காமெடி, பயணம் 

யோகி பாபு கருணாகரன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நாயகர்கள். இருவரும் வேறு வேறு பாதையில் ரசிகர்களை தங்களது தனிப்பட்ட திறமைகள் மூலம் கவர்ந்து தங்களுக்கான தடத்தை பதித்தவர்கள்.  அந்த  வகையில் தற்போது இருவரும் இணைந்து  டார்க் காமெடி கலந்த, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ‌ திரில்லர் படமான “ட்ரிப்” மூலம் ரசிகர்ளை மகிழ்விக்க வருகிறார்கள். “டார்லிங்” , “100” படங்களின் இயக்குநர் சாம் ஆண்டனின் இணை இயக்குநர் டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். […]

Continue Reading