full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

அண்ணனுக்கு ஜோடியான தம்பியின் ஜோடி

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் அனிருத் இசையில் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பாபு தயாரிக்கின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் முதற்கட்ட பணிகள் இந்த ஆண்டுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ரகுல் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

இதற்கிடையே கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் `நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், அடுத்ததாக சந்தானத்தை வைத்து `மன்னவன் வந்தானடி’ படத்தை அவர் இயக்கி வருகிறார்.