full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

அட்லியின் கனவு நிறைவேறுமா?

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து, விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது இவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் அட்லி, அக்‌ஷன் கிங் அர்ஜூனை வைத்து படம் இயக்குவது என்னுடைய கனவு என்று கூறியிருக்கிறார்.

அர்ஜூனின் 150வது படமான ‘நிபுணன்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. இதைப் பார்த்து விட்டு, அர்ஜூனுக்கு வாழ்த்துகள் கூறியது மட்டுமில்லாமல், அர்ஜூனை வைத்து படம் இயக்குவது என்னுடைய கனவு என்று கூறியிருக்கிறார்.

அட்லியின் கனவு நிறைவேறுமா என்று பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்…