அம்பிகாவின் நினைவலைகள்!

News

பல வருடங்களாக அரசு அதிகாரத்தின் தவறான போக்கிற்கு எதிராக தனி ஒருவராக  போராடுபவர் “டிராஃபிக்”ராமசாமி. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் தமிழில் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை அம்பிகா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இது குறித்து நடிகை அம்பிகா கூறுகையில்,

“நான் திரைத்துறைக்கு வந்து ஏறத்தாழ 30 வருடங்கள் ஆகிறது. இதுவரைக்கும் 250-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துவிட்டேன். அந்த திரைப்படங்களில் எல்லாம் கிடைக்காத புது அனுபவம் “டிராஃபிக்” ராமசாமி படத்தின் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் நான் நீதிபதியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமான படமாக உணர்கிறேன்.

அது மட்டுமில்லாமல், 32 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய “நான் சிகப்பு மனிதன்” படத்தில் நடித்ததை இப்போதும் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.