விஸ்வநாத் அண்ட் சன்ஸ்       திரைவிமர்சனம் 

cinema news movie review

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்       திரைவிமர்சனம்

நடிகர்கள் :சூர்யா, மமிதா பைஜி, ராதிகா சரத் குமார்,ரவீனா டாண்டன், மற்றும் பலர்.

இசை :ஜி. வி. பிரகாஷ் குமார்,

ஒளிப்பதிவு :நிமிஷ் ரவி,

இயக்கம் : வெங்கி அட்லுரி,

தயாரிப்பு :சூர்யதேவரநாக வம்ஷி& சாய் சௌஜன்யா.

கதாநாயகன் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா )ஒரு 40 வயது கடந்த பிரபல தொழிலதிபராக வருகிறார் தனது தந்தை தன் அம்மா இருக்கும்போது மற்றொரு திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு திருமண வாழ்க்கை மேலும் ஒரு வெறுப்பு ஏற்பட்டு விடும்  தனது தாயின் மீது அளவுக்கு அதிகமாகன அன்பும் பாசமும் கொண்டிருப்பார் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்கும் சஞ்சயின் வாழ்க்கையில், எதிர்பாராத வகையில் ஒரு குழந்தை வருவது கதையின் மிகப்பெரிய திருப்பமாகிறது. விமான நிலையத்தில் தனது மகன் அபயுடன் சஞ்சய் வந்து நிற்கும் காட்சியில் இருந்து, படம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. மமிதா கதாநாயகன் மீது காதல்  கொள்கிறாள் ஆனால் அதை ஏற்க மறுக்கிறார் சூர்யா காரணம் இருவருக்கும் வயது வித்தியாசம்  அதிகமாக இருப்பதால்  இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா? என்பது தான் மீதி கதை.

சூர்யா ஒரு கம்பீரமான ஆக்சன் ஹீரோவாக இல்லாமல் அதையும் தாண்டி தன் குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் ஒரு பொறுப்புள்ள மனிதராகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்  காதல் ஏற்க முடியாத காட்சிகளில் அமைதியாக வெளிப்படுத்தும் உணர்வுகள் அற்புதம் அவர் திறமைக்கு ஒரு பாராட்டு.

குழந்தையின் வாழ்க்கையில் மமிதா பையன் மேடி என்ற கதாபாத்திரத்தில் பயணிக்கிறார் சூர்யாவுடன் இணைந்து இளமையாகவும் குறும்புத்தனமாகவும்  பொறுப்புள்ள வராகவும்   நடிப்பின் மூலமாக நம் மனதை கவருகிறார் .

சூர்யாவும் அமிதா பைஜியும் வருகின்ற காட்சிகளில் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது காட்சிக்கு மேல் காட்சி அழகாகவும் அமைந்துள்ளது  நல்ல ஒரு ரசனையாகவும் உள்ளது.

தாயாக வரும் ராதிகா சரத்குமார் அவர்  கதைக்கு மேலும் பலம் கூட்டுகிறார் ரவீனா டாண்டன் கதைக்குள் வரும் விதமும், அவரது கதாபாத்திரத்திற்கும் சஞ்சய்க்கும் இடையிலான தொடர்பும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. அவரது கதாபாத்திரம் கதையின் உணர்ச்சிப் பரிமாணத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

இயக்குநர் வெங்கி அடலுரி குடும்பங்களுக்கு கொண்டாடும் வகையில் ஒரு அசத்தலான படைப்பு  கதையின் காதல் பாசம் உணர்வு பொறுப்பு எந்த வகையில் குறை இல்லாமல் நிறைவு செய்து இருக்கிறார்  திரைக்கதையோ கூடுதல் பலம்  இந்த படைப்பு தந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் .

மொத்தத்தில் விஸ்வநாத் அண்ட்  சன்ஸ் குடும்பங்கள் கொண்டாட வேண்டிய   ஒரு நல்ல படம்  .