full screen background image
Search
Tuesday 7 May 2024
  • :
  • :
Latest Update

அஜித்தின் புதிய தயாரிப்பாளர்!

அஜித் நடிக்கும் “விஸ்வாசம்” படமே இன்னும் தொடங்கவில்லை. ஒட்டுமொத்த திரையுலகமுமே ஸ்டிரைக்கினால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான வடசென்னை செட்டும் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறது.

இந்நிலைலையில் விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கப் போகும் படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தை “சதுரங்க வேட்டை”, “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.