full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

ஒரு கோடி பேர் ரசித்த விஐபி!

‘வேலையில்லாப் பட்டதாரி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி’ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், அனு இம்மானுவேல், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையில் வெளியாகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் கடந்த ஜுன் 25-ஆம் தேதி வெளியான `வேலையில்லா பட்டதாரி 2′ படத்தின் டிரைலர் இதுவரை ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

`வேலையில்லா பட்டதாரி’ வரிசையில் 3 மற்றும் 4-வது பாகங்களும் வெளியாகும் என்று தனுஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.