full screen background image
Search
Wednesday 8 May 2024
  • :
  • :
Latest Update

வீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை ரஜினியை துரத்தி வந்த இளைஞன் !

ரஜினி இன்று தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். இதற்காக காலை 8 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ஏர்போர்ட் சென்றார்.

அப்போது ஒரு இளைஞன் ரஜினியை வீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை துரத்தி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இதை பார்த்த ரஜினி காரை நிறுத்து கூறியுள்ளார்.

கார் நின்றதும் அந்த இளைஞனை அழைத்து ஏன்பா பின்னாலே வருகிறாய் என்று கேட்க, அதற்கு அந்த இளைஞன் ‘சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன், ஒரு புகைப்படம் வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியும் மெல்ல சிரித்து ‘Sure-டா கண்ணா’ என்று புகைப்படம் எடுத்துள்ளார், இதை அந்த இளைஞனே சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளான்.