full screen background image
Search
Saturday 11 May 2024
  • :
  • :
Latest Update

தம்பி ராமையாவின் உலகம் விலைக்கு வருது

மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படங்களைத் தொடர்ந்து தம்பி ராமையா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

தம்பி ராமையாவின் மகனான உமாபதி அறிமுகமான `அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், உமாபதியை வைத்து தானே படம் ஒன்றை இயக்க தம்பி ராமையா முடிவு செய்து அதற்கு `உலகம் விலைக்கு வருது’ என்ற தலைப்பு வைத்திருக்கிறார்.

மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், விவேக் பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், சாமிநாதன், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் பாடல் காட்சிகளை படமாக்கி வரும் தம்பி ராமையா, அடுத்த கட்ட படப்பிடிப்புகளை தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பி கே வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தினேஷ் இசையமைக்கிறார்.