full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

வித்தைக்காரன் திரைவிமர்சனம்

வித்தைக்காரன் திரைவிமர்சனம்

நடிகர்:சதீஷ்

நடிகை:சிம்ரன் குப்தா

இயக்குனர் வெங்கி.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த சதீஷ் நாய் சேகர், காஞ்ஜூரிங் கண்ணப்பன் படங்களை தொடர்ந்து மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ள படம் வித்தைக்காரன். இப்படத்தை வெங்கி இயக்கியுள்ளார். படத்தின் கதைப்படி சதீஷின் அப்பா மேஜிக் கலைஞர் என்பதால் தனது மகனுக்கும் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கிறார். இந்த நிலையில் சட்டவிரோத தொழில் செய்யும் சேட்டுவிடம் மூன்று பேர் வேலை செய்து வருகின்றனர். அந்த சேட்டையே கொலை செய்துவிட்டு அந்த பழியை வேறு ஒருவரின் மேல் போட்டுவிடுகின்றனர். அந்த மூன்று பேரும் பின்னாளில் மிகப் பெரிய கடத்தல் ஆசாமிகளாக உருவெடுத்து தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மூவருக்கும் உதவுவதுபோல் நடித்து ஒரு மிகப் பெரிய பிரச்சினையில் சிக்க வைக்கிறார் நாயகன். ஏன் அப்படி செய்தார்? அதற்கான காரணம் என்ன? என்பதே வித்தைக்காரன்.

நாயகன் சதீஷ் மேஜிக்காரன் என்று மிகப் பெரிய பில்டப்புடன் அறிமுகமானாலும் கடைசிவரை ஒன்னுமே செய்யாமல் சொதப்பிவிட்டார். இது காமெடி கதைதான் லாஜிக் பார்க்க கூடாதுதான் அதற்காக திரையில் நடக்கும் அத்தனை அபத்தங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது அல்லவா?. சுமாரான கதைக்கு படு சுமாரான திரைக்கதை எழுதி சோதித்துவிட்டார் இயக்குனர் வெங்கி.

நாயகி சிம்ரன் குப்தா பயங்கரமான அறிமுகத்துடன் வந்து பின்னர் பத்தோடு பதினொன்றாக திரையில் தேமே என வந்துகொண்டு இருக்கிறார். ஆனந்தராஜ் தனது வழக்கமான காமெடியில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார். அதுவும் சில இடங்களில் ஓவர் டோஸாக மாறிவிடுகிறது. ஒளிப்பதிவு சுமார். பாடல்கள் எடுபடவில்லை. சதீஷ் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும் நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி.

மொத்தத்தில் வித்தைக்காரன் – ஏமாற்றம். ரேட்டிங் 2/5