கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

News

விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இப்படமும் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படங்களை முடித்து ஹரி இயக்கத்தில் ‘சாமி 2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த், விக்ரமுக்காக கதை எழுதியிருப்பதாகவும், விக்ரமும் கதையை கேட்டு நடிக்க சம்மதித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆதலால், விரைவில் இவர்கள் கூட்டணியில் சுப்பர் ஹிட் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.