கோதாவில் குதிக்கிறாரா விஜய்?

News

 

ரஜினியா? கமலா? என்று தமிழகமே பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், சத்தமே இல்லாமல் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமிட்டு வருகிறார்.

அதாவது, உலகெங்கிலும் இருக்கிற தனது ரசிகர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறார் விஜய். அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றங்களில் இல்லாமல் சிதறிக் கிடக்கிற ரசிகர்களுக்கென்று “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் செயலி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ரசிகர்கள் நேரடியாக  தங்களை “விஜய் மக்கள் இயக்கம்” உறுப்பினராக்கிக் கொள்ள முடியும்.

ரஜினி, கமல், விஷால், உதயநிதி தற்போது விஜய்… மக்கள் யார் பக்கமோ?