தாறுமாறா வெளியான ”விதி மதி உல்டா” பாடல்கள்!

News

ரைட்ஸ் மீடியா வொர்க்ஸ் சார்பில் நடிகர் ரமீஷ் ராஜா தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் “விதி மதி உல்டா”. ஜனனி அய்யர், டேனியல் பாலாஜி, கருணாகரன்,  சென்ராயன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை விஜய் பாலாஜி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் “விதி மதி உல்டா” படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யுவில் நடந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் வினாயகமூர்த்தி பாடல்களை நேரடி இசைநிகழ்ச்சியாக நடத்தினார். நிறைந்த ரசிகர்களுக்கு மத்தியில் நடந்த இந்த விழாவில் அனைத்து பாடல்களையும் அந்தந்த பாடல்களைப் பாடிய பாடகர்களை வைத்தே இசைநிகழ்ச்சியை நடத்தியது நல்ல வரவேற்பைப் பெற்றது.

விழாவில் பாடகி சின்மயி, பாடகர் கானா பாலா ஆகியோர் கலந்து கொண்டு பாடிய பாடல்களுக்கும், அஸ்வின் பாடிய பாடலுக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய நிகழ்ச்சி களைகட்டியது. இந்த விழாவில் நடிகை சீதா, நடிகர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே விதி மதி உல்டா படத்தின் “உன் நெருக்கம்” பாடல் யூ டியூபில் வெளியாகி 35,00000 பார்வையாளர்களைக் கடந்து அனைவரின் வரவெற்பையும் பெற்றிருக்கிறது.