full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

ஐ யாம் வெய்ட்டிங் : வசந்த் ரவி

வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தரமணி’

வரும் 11ம் தேதி அன்று வெளியாக இருக்கும் இப்படம் குறித்து ராம் கூறும் போது, “தங்க மீன்கள் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், அப்படம் வெளிவர பெரும் உதவி செய்தவர் வசந்த் ரவியின் தந்தை.

அதற்கு கைமாறாகத் தான் வசந்த ரவியை ஹீரோவாக்கினேன். ஆனால் அவருக்காக கதையை உருவாக்கவில்லை. நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு வசந்த் ரவி பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே அவரை நடிக்க வைத்தேன்.” என்றார்.

படத்தில் நடித்துள்ள வசந்த் ரவி பேசிய போது, “தரமணி படக்கதையை ராம் என்னிடம் கூறிய போது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவே இல்லை. சந்தோசத்தில் துள்ளி குதித்தேன். இப்படத்தில் நான் கால் சென்டர் ஊழியராக நடித்துள்ளேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது.

சினிமா குறித்தும், நடிப்பு குறித்தும் ராம் மூலமாக நிறைய கற்றுக் கொண்டேன். ஆகஸ்டு 11ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.