TN 2026 திரைவிமர்சனம்

cinema news movie review

TN 2026 திரைவிமர்சனம்

நடிகர்கள்: நட்ராஜ், தம்பி ராமையா,எம் எஸ் பாஸ்கர், இளவரசன்,ஸ்ரீரிடே ராவ் சாந்தினி தமிழரசன், கிங்ஸ்லி, மற்றும் பலர்.

இசை: தர்புகா சிவா

ஒளிப்பதிவு :P. G முத்தையா,

இயக்கம்: உமாபதி S. ராமையா,

தயாரிப்பு: கண்ணன் ரவி.

கதாநாயகன் வடக்கிலிருந்து தென்னகத்திற்கு ஒரு சாதாரண நடிகனாக வருகிறார் அவர் மீது ஜமீன்தாரான தம்பி ராமையா பார்வை விழுகிறது இவரால் மிகப்பெரிய உச்சத்தின் நாயகனாக மாறுகிறார் பிறகு இவர் அரசியல் வருகிறார் பிறகு அவரை சுற்றியுள்ள அனைவரும் அடுத்த முதல்வர் நீங்க தான் என்று நம்ப வைக்கிறார்கள் ,என்ன நடந்தது சுவாரிசமான ஒரு முடிவை தந்துள்ளது இந்த டி என் 2026

கதாநாயகன் நட்டி நட்ராஜ் இந்தப் படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறார். ஆரம்பத்தில் நகைச்சுவை நயத்துடன் தொடங்கும் அவரது நடிப்பு, பின்னர் ஆழமான, கணக்கிட்டு செயல்படும் அரசியல் மனிதராக மாறுகிறது. ஒரு சாதாரண மனிதனிலிருந்து சதிகார அரசியல்வாதியாக மாறும் அந்த பரிணாமத்தை அவர் திறமையாக வெளிப்படுத்துகிறார்.

தம்பி ராமையா தனது அனுபவத்தால் கதைக்கு வலுவூட்டுகிறார். நட்டி நட்ராஜுடன் அவருடைய காட்சிகள் நகைச்சுவையையும், அதே நேரத்தில் கதையின் மேலும், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் படத்திற்கு கூடுதல் ஆழம் அளிக்கிறார். தனது தனித்துவமான நடிப்பால் சிரிப்பைத் தருகிறார்.

சாந்தினி தமிழரசன்  தனக்குத் தந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார்.

குல்கந்ட் குமார் மனைவியாக அளவான மற்றும் நம்பிக்கைக்குரிய நடிப்பை வழங்கியுள்ளார். குறுகிய நேரத்தில் தனது கதாபாத்திரத்தை பதிவு செய்ய முடிகிறது

இசை படத்திற்கு  பின்னணி இசை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கச்சிதமாக தந்துள்ளார்.

ஒளிப்பதிவு ஒரு அரசியல் களம் காட்சி எப்படி  அமைக்கப்பட முடியுமோ அவ்வாறு அமைத்துள்ளார்.

மொத்தத்தில் டிஎன்2026 நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு நகைச்சுவையான ஒரு நல்ல படம்.