LIK – திரை விமர்சனம்
நடிகர்கள்:பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி, கௌரி ஜி கிஷன், எஸ்.ஜே. சூர்யா, சீமான்,யோகி பாபு, மாளவிகா, ஆனந்தராஜ், மற்றும் பலர்.
இசை :அனிருத்,
ஒளிப்பதிவு:ரவி வர்மன்,
இயக்கம்: விக்னேஷ் சிவன்,
தயாரிப்பு: நயன்தாரா.

இந்த நவீன காலகட்டத்தில் 20240காலம் எப்படி இருக்கும் என்று நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த lik இந்த மனித உணர்வுகளையும் ஒரு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மொபைல் ஆப் எப்படி கணிக்க முடியும் சரியாக இருக்கும்.அதுவும் 2040 காலகட்ட ஆண்டு இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை வியக்க வைக்கும் அளவில் சரியாக அமைந்திருக்கிறது ஆனால் கதாநாயகனின் வாய்ஸ் தான் அந்த கம்பெனியின் பின்னணி வாய்ஸ் ஆக அமைந்திருக்கும் எதிர்பாராமல் ஒரு நாள் கீர்த்தி செட்டியை சந்திக்கிறார் அக் கனமே காதல் வசப்படுகிறார் இருவரும் சேர்ந்து பழக ஒரு நாள் இந்த lik காதல் மீட்டர் என்ற ஒரு ஆப் ஆப்பின் மூலமாக தங்கள் காதலோடு அளவை எவ்வளவு இருக்கும் என்று சோதித்து பார்க்கிறார்கள் அப்போது அவர்களுக்கு எதிர்ப்பாராத முடிவு சந்திக்கிறார்கள் இது எப்படி சரியாக வரும் என்று பிரதிப் ரங்கநாதன் கேள்வி கேட்க மறுமுனையில் கீர்த்தி செட்டியும் இதுதான் கரெக்டான தீர்ப்பாக இருக்கும் என்று அவரும் மறுபுறம் பதிலளிக்க இறுதியில் இவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? மனித உணர்வுகளா? இல்லை இந்த ஒரு மொபைல் ஆப் தான் வென்றதா என்பது தான் மீதி கதை.
கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் வைப் வாசா என்கிற கேரக்டரில் காதல், காமெடி, எம்மோஷன் காட்சிகளில் வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார். அதே போல் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா பக்கவாக பொருந்தியுள்ளார். ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நல்லப்படியாக கையாண்டர்,
குறிப்பாக யோகி பாபு, ஷா ரா மற்றும் பிரதீப் ரங்கநாதனின் காமெடி காம்போ ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக சீமான் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் ஓரளவு நல்ல நடிப்பை தந்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. புரொடக்ஷன் வேல்யூ (Production Values) டாப் நாட்ச் ரகம். விஷுவல்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இதுமட்டுமில்லாமல் அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவு ரவி வர்மன் படத்தின் மிகப்பெரிய பங்காக உள்ளது.
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் உலகக்கட்டமைப்புதான்எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதை மிகவும் வினோதமாகவும், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் காட்டியிருக்கிறார்கள். முதல் பாதியில் இந்த புதிய உலகம் நமக்குப் பழகும் வரை காட்சிகள் வேடிக்கையாகவும், ரசிக்கும்படியும் நகர்கின்றன.
மொத்தத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதிநவீன பிரம்மாண்டம்.

