full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

முடிவுக்கு வராத ஸ்ட்ரைக்.. தயாரிப்பாளர் சங்கம் வைக்கும் கோரிக்கைகள்!!

கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் பட தயாரிப்பாளர் புதுப்படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பல தியேட்டர்களில் பழைய படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்களிலும் ரசிகர்களின் வரவு குறைவாகி உள்ளது. இதனால், சினிமா உலகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளின் விவரங்கள் பின்வருமாறு,

* மக்களிடம் டிக்கட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

* டிக்கட் கட்டணத்தை குறைத்து ஏழை, நடுத்தர, உயர்தர மக்கள் மூன்று தரப்பினரும் படம்பார்க்க டிக்கட் கட்டணத்தை முன்பு இருந்ததுபோல் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாவது வகுப்பு, என முறைப்படுத்த வேண்டும்.

* தயாரிப்பாளர்கள் முன்பு தியேட்டர்களுக்கு பிரிண்ட் தந்ததுபோல் தற்போது படத்தை மாஸ்டிரிங் செய்து கண்டன்ட் தருகிறோம்.
ப்ரொஜக்டர் வைத்து திரையிடுவது திரை அரங்க உரிமையாளர்களின் பொறுப்பு.

* அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு அனைவருக்கும் உண்மையான வசூலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படும்போது அந்த படத்தின் வசூல் உண்மையிலேயே குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றார்போல் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சம்பளம் குறைக்க படவேண்டும்.

* ஒவ்வொரு ஏரியாவிலும் சில நபர்களால் 80% தியேட்டர்கள் கையகப்படுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய தியேட்டர்கள் தடுக்கபடுவதும், திரையிடும் தியேட்டர்களில் தரப்படும் டெபாஸிட் பணம் கொடுக்கப்படாமலும் தனிநபர்களால் செய்யப்படுகிறது. மற்றும் வசூல் தொகையில் மிகக்குறைவான சதவீதம் பணமே ஷேர் தொகையாக அதுவும் பல மாத இழுத்தடிப்பிற்கு பிறகே தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது.

* அதனால் சிண்டிகேட் இல்லாமல் இனிமேல் அந்தந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான் நேரடியாக தயாரிப்பாளர்களுடன் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

இத்தனை கோரிக்கைகளை வலியுறுத்தி தான் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் செய்து வருகிறார்கள்.