Tag: ரஜினிகாந்த்
தற்போதைய அரசியலைப் பிரதிபலிக்கும் காலா?
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹூமாகுரேஷி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஜினி ஜோடி ஈஸ்வரி ராவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ‘காலா’ படத்தில் ஹூமாகுரேஷி பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இது இந்த படத்தின் முக்கியமான பாத்திரம். ஹூமா குரேஷிக்கு அழுத்தமான வேடம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ‘காலா’ […]
Continue Readingகாலா குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான, தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் […]
Continue Readingதீவிர ரசிகனின் இயக்கத்தில் ரஜினி படம்
நடிகர் செல்வா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ள இவர் `கோல்மால்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், `12.12.1950′. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளைக் குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனைப் பற்றிய கதை என்று செல்வா கூறியிருக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார். […]
Continue Readingபூந்தமல்லியில் ரஜினி பட ஷூட்டிங்
நடிகர் ரஜினிகாந்த் 2 மாதங்கள் ரசிகர்கள் சந்திப்பு, காலா படப்பிடிப்பு என்று ஓய்வில்லாமல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் மும்பையில் விறுவிறுப்பாக நடந்த காலா படப்பிடிப்பில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே ‘கபாலி’ படம் முடிந்தபோதும் அவர் அமெரிக்காவுக்கு சென்று ஓய்வு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் தங்கி இருக்கும் அவர் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டதாகவும், ரஜினிகாந்த் […]
Continue Readingரஜினிக்கு நன்றி தெரிவித்த கமல்
மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் […]
Continue Readingமும்பை காலா 12ம் தேதி முதல் சென்னையில்
சங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ஒப்பந்தமாகி, மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரஜினி. அவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் சென்னை திரும்பி விட்டனர். இந்நிலையில் ‘காலா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 10-ஆம் தேதி முதல் சென்னையில் […]
Continue Readingமுழுக்க முழுக்க 3டி-யில் 2.0
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டை வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, சைனீஷ், ஸ்பானீஷ், […]
Continue Readingஹிந்திக்கு வாய்ஸ் கொடுக்கும் ரஜினி
ரஜினியின் ‘2.0’ படத்தைப் பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், இந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா’ குறித்து […]
Continue Reading`2.0′ படத்தின் புரமோஷன் திருவிழா
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ.400 கோடியில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கிறது. `2.0′ பட புரமோஷனுக்காக […]
Continue Reading
