கமலுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியா

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காக தான். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நான் கவலைப்பட்டதில்லை. அரசியல் என்பது காமெடியான வி‌ஷயம் அல்ல. அது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் மிகப்பெரிய அடித்தளம். […]

Continue Reading

ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகை ட்வீட்

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவது குறித்து நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு டெலிவிஷன் சேனல்களிலும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதைப் பற்றியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களால் ஏன் நல்லதொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது? ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீப்ரியாவிடம் ரசிகர் ஒருவர், “போன தடவை 1000 ரூபாய் […]

Continue Reading

விக்ரம் மகனுக்கு ஜோடியாக கமல் மகள்?

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி’. தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நாயகனாக துருவ் விக்ரம், இயக்குனராக பாலா என இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்ப்பை […]

Continue Reading

ரஜினி, கமலிடம் வேண்டுகோள் வைத்த அல்போன்ஸ் புத்திரன்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மேலும், “சினிமாவையும் சூதாட்டத்தோடு ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா? தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை சந்தித்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு […]

Continue Reading

கமல் உணர்ந்த பெரியாரின் கனவு

முக்கிய பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம். திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 36 பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கும் வாழ்த்து தெரிவித்து தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். மேலும் பெரியாரின் கனவை உணர முடிகிறது என்றும் […]

Continue Reading

கமலை வரவேற்கும் கெளதமி

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எவர்கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், லைப் அகேய்ன் புற்றுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவை சார்பில் பொதுநல மருத்துவ முகாம் இன்று நாமக்கல்லில் நடந்தது. இந்த முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய நடிகை கெளதமி, “புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இந்த அமைப்போடு இணைந்து இன்று மருத்துவ முகாம் நாமக்கல்லில் இன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் […]

Continue Reading

அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல் சந்திப்பு

ரஜினியின் அரசியல் பிரவேசம் வெளிப்பட்டது முதலே நடிகர் கமல்ஹாசன் தனது பங்கிற்கு அமைச்சர்கள், ஊழல், நீட், டெங்கு, காந்தி குல்லா என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் தீவிர அரசியலில் விரைவில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஆசை என்றும் அறிவித்திருந்தார். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, […]

Continue Reading

அவரது ரசிகர்களில் ஒருவனாக வந்திருக்கிறேன் : கமல்ஹாசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. நடிகர் சிவாஜி […]

Continue Reading

நேர்மையாளர்களின் சார்பில் வாழ்த்திய விவேக்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார். கமலின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில், “வருவது யாராக இருப்பினும் வாழ்த்துவது, மரபாக இருப்பினும் மகுடம் தரிக்க வைப்பது மக்களே. அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் […]

Continue Reading

ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லோரும் எனக்கு உறவினர்கள் : கமல்ஹாசன்

சென்னைக்கு வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் சென்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். அர்விந்த் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசிக்கொண்டதாக கூறப்பட்டது. இருவரும் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல், “டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் என்னை சந்திக்க கேட்டதையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் […]

Continue Reading