முன்னணி வேடத்தில் தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் முன்னணி வேடத்தில் தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’ பல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறது. ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது.  நயன்தாராவை […]

Continue Reading

வீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி!

  தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது விஜய் கைகோர்த்திருக்கிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சில நிமிட துளிகளுக்கு முன் வெளியானது. படத்தின் டைட்டிலாக ‘பிகில்’ என வைத்துள்ளனர். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கெட்-அப்’களில் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் தளபதி. இதில், அப்பா  தளபதி ஆக்‌ஷனுக்கு அரிவாளும், மகன் தளபதி கையில் ஆட்டத்துக்கு கால்பந்தும் உள்ளது. ஆக்‌ஷனுக்கு தந்தையும் […]

Continue Reading

கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி

“போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது” என்ற அளவில் யோகிபாபுவின் கொடி கோடம்பாக்கத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றிபெற்று வரும் நிலையில், யோகிபாபுவை முழுக்க முழுக்க கதையில் புகுத்தி படத்தையே வேறோர் காமெடி தளத்தில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன். R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள “கடலை போட ஒரு பொண்ணு வேணும்”  படத்தை வேகமாக எடுத்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, “யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை […]

Continue Reading

நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு “தர்ம பிரபு

யுகபாரதி பேசும்போது, என் நண்பர் தயாரிப்பாளராகியிருப்பது மகிழ்ச்சி. நகைச்சுவைக்கு இவரைத் தவிர ஆள் இல்லை என்பதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் நண்பன் முத்துகுமாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார். ரேகா பேசும்போது, இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர் அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா? என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் […]

Continue Reading

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது

பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் ‘ஜாம்பி’. இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப்  பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், ‘பிஜிலி’ ரமேஷ், ஜான் விஜய், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒரு  பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் […]

Continue Reading