டிரெண்ட் ஆகும் துப்பறிவாளன்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அரோல் காரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்தது. இறுதியாக விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு காண்பித்தனர். படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் […]

Continue Reading

சண்டக்கோழிக்காக சென்னையில் உருவாகும் அழகான மதுரை

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஷால். லிங்குசாமி இயக்கவுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பின்னிமில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் […]

Continue Reading

பெப்சி வேலைநிறுத்தம், ரஜினி அறிக்கை

‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இந்த பிரச்சினை குறித்து விஷால் தலைமையில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புகளில் […]

Continue Reading

காதல் படத்தில் கெஸ்ட் ரோலில் அர்ஜூன்

அர்ஜூன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிபுணன்’. அர்ஜூனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர். விறுவிறுப்பான டீசர் மூலம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அர்ஜூன், அருண் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன், “இரண்டு வருடங்களில் உருவான படம் […]

Continue Reading

விஷாலுக்கு வந்த மிரட்டல் மெசேஜ்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், “தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் வெளியாகி உள்ளது. விஷாலின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு […]

Continue Reading

இன்றைய முக்கிய செய்திகள் 26-7-2017

• இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு: டெல்லியில் கோலாகல விழா • ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தினால் உரிமம் ரத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு • கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனராகிறார் சுந்தர் பிச்சை • போதை பொருள் வழக்கில் மேனேஜர் கைது -எனக்கு எதுவும் தெரியாது காஜல் அகர்வால் பேட்டி • பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு • […]

Continue Reading

கருப்பு ராஜா வெள்ளை ராஜாவும் தனித்தனியா வர்றாங்களா?

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்க ஒப்பந்தமான படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியது. படத்தின் பாடலுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாடு சென்றிருந்தனர். மேலும் 4 பாடல்களும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு காரணங்கள் ஏதுமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக புதிய […]

Continue Reading