பெப்சி வேலைநிறுத்தம், ரஜினி அறிக்கை

‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இந்த பிரச்சினை குறித்து விஷால் தலைமையில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புகளில் […]

Continue Reading

தற்போதைய அரசியலைப் பிரதிபலிக்கும் காலா?

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹூமாகுரேஷி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஜினி ஜோடி ஈஸ்வரி ராவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ‘காலா’ படத்தில் ஹூமாகுரேஷி பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இது இந்த படத்தின் முக்கியமான பாத்திரம். ஹூமா குரேஷிக்கு அழுத்தமான வேடம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ‘காலா’ […]

Continue Reading

காலா குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான, தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் […]

Continue Reading

தீவிர ரசிகனின் இயக்கத்தில் ரஜினி படம்

நடிகர் செல்வா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ள இவர் `கோல்மால்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், `12.12.1950′. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளைக் குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனைப் பற்றிய கதை என்று செல்வா கூறியிருக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார். […]

Continue Reading

பூந்தமல்லியில் ரஜினி பட ஷூட்டிங்

நடிகர் ரஜினிகாந்த் 2 மாதங்கள் ரசிகர்கள் சந்திப்பு, காலா படப்பிடிப்பு என்று ஓய்வில்லாமல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் மும்பையில் விறுவிறுப்பாக நடந்த காலா படப்பிடிப்பில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே ‘கபாலி’ படம் முடிந்தபோதும் அவர் அமெரிக்காவுக்கு சென்று ஓய்வு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் தங்கி இருக்கும் அவர் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டதாகவும், ரஜினிகாந்த் […]

Continue Reading