அண்ணாசாலையில் பெயர் பலகை தூண் மீது மாநகர பேருந்து மோதி விபத்து: 8 பேர் காயம்
சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பேருந்து ‘18கே’ ஒன்று இன்று காலை 11 மணி அளவில் அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே வந்து கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் ஏழுமலை ஓட்டினார். கண்டக்டர் இளங்கோவன் மற்றும் பயணிகள் 50 பேர் பேருந்தில் இருந்தனர். அப்போது இந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த வழிகாட்டி பெயர் பலகை இரும்பு தூண் மீது மோதியது. இதில் பெயர் பலகை தூண் சாலையின் நடுவில் சரிந்து விழுந்தது. […]
Continue Reading
