பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ் – நடிக்கும் ‘பிளட் மணி’ (Blood Money) – ஜீ5 ஒரிஜினல் படம்

2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு […]

Continue Reading

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் […]

Continue Reading

ஈழ பின்னணியில் உருவாகி ‘யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம்!

ஒரு சில குறிப்பிட்ட வகையான படங்கள் தணிக்கை சான்றிதழ்களை பொறுத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை இழக்கும். குறிப்பாக தமிழ் ஈழத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் போர்க்கள் காட்சிகள், இரத்தக்களரி, அழுத்தமான வசனங்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் அந்த காட்சிகளை வெட்டி எறிய மற்றும் வசனங்கள் ஒலியிழப்பு செய்ய தணிக்கை குழு வலியுறுத்தும். இருப்பினும், “சினம் கொள்” அந்த மாயையை உடைத்து, ‘யு’ சான்றிதழை பெற்று ஒரு முன்னோடியாக மாறியிருக்கிறது. கனடாவில் பிறந்து வளர்ந்த […]

Continue Reading

விருது பெற்ற மகிழ்வன்

என் மகன் மகிழ்வன் (My Son is Gay) – ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது. மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், […]

Continue Reading

படவாய்ப்பை பெற்றுக் கொடுத்த கல்கி

சிறப்பாக எடுக்கப்படும் உணர்வுபூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். அந்த வகையில் திலிப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படமான ‘கல்கி’ உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இது ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம். இந்த குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்துவருகிறது. தற்பொழுது இந்த குறும்படத்தை டிஜிட்டல் […]

Continue Reading

உறுதி கொண்ட ஜூட் லினிகர்

ஆர் அய்யனார் இயக்கத்தில், ஏ.பி.கே. பிலிம்ஸ், சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுதி கொள்’. இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் லினிகர், எடிட்டிங் – எம்.ஜேபி, பாடல்கள் – மணிஅமுதன், ஸ்டண்ட் – […]

Continue Reading

ஆச்சர்யங்கள் நிறைந்த களத்தூர் கிராமம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் சார்பில் சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் என்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று. இந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் […]

Continue Reading