இன்னொரு வெங்கட் பிரபு ஆகிறாரா சிவா??

அண்ணன் – தம்பின்னா அண்ணன் – தம்பி, அப்படி ஒரு அண்ணன் – தம்பி வெங்கட் பிரபுவும் பிரேம்ஜி அமரனும். கதை இல்லாமல் கூட படம் எடுப்பேன் ஆனா என் தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருப்பவர் வெங்கட் பிரபு. சென்னை28 தொடங்கி சென்னை28 பார்ட் 2 வரை அவரின் எல்லா படங்களிலுமே பிரேம்ஜி தனியாக தெரிவார். அப்படி தம்பிக்காக படத்தில் இடம் வைத்திருப்பார் வி.பி. அதே போல எப்படியாவது தன் தம்பியையும் […]

Continue Reading

நாச்சியாரும், பண்பாட்டுக் காவலர்களும் !

நிச்சயமாக ஜோதிகாவுக்கோ, பாலாவுக்கோ முட்டுக் கொடுக்கப் போவதில்லை இந்தக் கட்டுரை. எழுதக் கூடாதென்று நினைத்து நாச்சியார் விவகாரத்தைத் தவிர்த்தே வந்தேன். லட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகளுக்கு அமைதியாக வேடிக்கைப் பார்த்தது போலவே, நாச்சியார் சலசலப்புகளையும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கடந்து விடலாம் என்பதில் மண்ணள்ளிப் போட்டது ஒரு வீடியோ. அந்த வீடியோவில், “வேறு யாரோ தெருவில் போறவங்களோ, யாராவது துணை நடிகைகளோ, ஆண் நடிகர்களோ அந்த சர்ச்சைக்கு வித்திட்ட வார்த்தையை (இனி அந்த வார்த்தையை […]

Continue Reading

பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். […]

Continue Reading

பாலாவின் எதார்த்த சினிமா !

“ஆஹா, சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை அற்புதமாகக் கலை வடிவமாக்குகிறாரப்பா இந்த பாலா” என்று அபூர்வ கலைஞனாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநர் பாலா. ஆனால் பாலா என்கிற இயக்குநருக்கு உண்மையிலேயே புறக்கணிக்கப்பட்ட மக்களின் மீதோ, பெண்களின் மீதோ அக்கறை இருந்திருக்கிறதா? இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சேது தொடங்கி இப்போது படமாக்கப்பட்டு வரும் நாச்சியார் வரை பாலா தேர்ந்தெடுக்கும் கதைக் களமும், கதை மாந்தர்களும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திப் போகிறார்கள் என்பது பாலாவிற்கே […]

Continue Reading

பாலா படத்தின் முக்கிய அறிவிப்பு!

“தாரை தப்பட்டை” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் “நாச்சியார்”. ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜோதிகா நடித்து வரும் இந்த படத்தை பாலாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாகிய “பி ஸ்டுடியோஸ்” தயாரிக்கிறது. வழக்கம்போல படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், படம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். நாச்சியார் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி தான் அந்த அறிவிப்பு. “பி ஸ்டுடியோஸ்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “நாளை (15.11.2017) மாலை […]

Continue Reading

விக்ரம் மகனுக்கு ஜோடியாக கமல் மகள்?

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி’. தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நாயகனாக துருவ் விக்ரம், இயக்குனராக பாலா என இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்ப்பை […]

Continue Reading

சரஸ்வதி பூஜைக்கு நாச்சியார் வருகை?

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `நாச்சியார்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். […]

Continue Reading

பாலா படத்தின் மோஷன் போஸ்டர்

தாரை தப்பட்டை படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகாவும், மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி வி பிரகாஷும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சூர்யா வெளியிட்ட இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் […]

Continue Reading

பிறந்த நாளில் பாலாவிடம் ஆசி பெற்ற ஆர்.கே.சுரேஷ்!

தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’யில் அறிமுகமான பின் வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். வில்லனாக நடித்து வந்தவர், இப்போது நாயகனாகி ‘தனி முகம்’, ‘பில்லா பாண்டி’ , ‘வேட்டை நாய்’ […]

Continue Reading