3டியில் நாளை ரஜினியின் 2.0

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து […]

Continue Reading

முன்னணி நடிகையின் முன்னுதாரண செயல்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சன்னி லியோன். ‘ஜெசிம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராகினி எம்.எம்.எஸ்.2, ஜாக்பாட் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது அக்‌ஷய்குமார், சாருக்கான் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார். 36 வயதான சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபேருடன் சேர்ந்து, மராட்டியத்தில் வறட்சி பாதித்த லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். இந்த குழந்தைக்கு நிஷா கவுர் வெபேர் என பெயர் சூட்டியுள்ளனர்.

Continue Reading

`2.0′ படத்தின் புரமோஷன் திருவிழா

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ.400 கோடியில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கிறது. `2.0′ பட புரமோஷனுக்காக […]

Continue Reading

விருதுகளை வென்ற கலைஞர்கள்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினைப் பெற்றார். தர்மதுரை படத்தின் எந்த பக்கம் பாடலுக்காக வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு படமான […]

Continue Reading

தேசிய விருதை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்: நடிகர் ஆவேசம்

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைத் தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்‌ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்‌ஷய் குமார், “ஒருவர் தேசிய விருதை பெறும்போது அவரை சுற்றிலும் விவாதம் நடப்பதை கடந்த 25 ஆண்டுகளாக […]

Continue Reading

பட ரிலீஸ், அடுத்த வருசம் தான்… சோகத்தில் ரசிகர்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.0′. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதமிருப்பதால் இப்படத்தின் […]

Continue Reading