தினகரன் அணி ஆர் கே நகர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு […]

Continue Reading

5 நாட்கள் பரோலில் சசிகலா சென்னை வருகை

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை நேரில் சென்று பார்க்க 15 நாட்கள் அவசர “பரோல்” வழங்குமாறும் கோரி இருந்தார். இந்த நிலையில் சசிகலாவின் […]

Continue Reading

பரோல் கேட்ட சசிகலா மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா சார்பில், சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் நேற்று ஒரு மனு வழங்கப்பட்டது. அதில், தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை நேரில் […]

Continue Reading

சசிகலா நியமனம் ரத்து : அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. (அம்மா) என்றும், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்றும் 2 ஆக உடைந்த அ.தி.மு.க. சமீபத்தில் ஒன்றாக இணைந்தது. இதற்கு டி.டி.வி.தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் […]

Continue Reading

ரூபாவாக அனுஷ்காவா? நயன்தாராவா?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கே சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ரூபாவின் இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். மேலும் அவரை அதிரடியாக பணியிடமாற்றமும் செய்தனர். ஆனாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ரூபா, தான் கூறியது அனைத்தும் உண்மைதான் […]

Continue Reading

விதிமீறிய முதல்வர் பதவியிழக்க நேரிடும் – டி.டி.வி தினகரன்

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதவியில் செயல்பட இயலாது என அக்கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக தினகரன் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி தினகரன், “என்னை நீக்கியதாக வெளியான தீர்மானத்தில் வெறும் அதிமுக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி […]

Continue Reading

சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சந்தித்தார். தம்பிதுரையைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார். சசிகலாவை சந்தித்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. 122 எம்எல்ஏக்களும் எங்களுடனே உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம், யாரிடமும் சமாதானம் பேசத் தேவையில்லை.” என்று […]

Continue Reading

டி.டி.வி. தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் கடந்த 2-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளிவந்த தினகரனுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாள் சென்னை திரும்பிய போதும் விமான நிலையத்தில் தினகரனை அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். தினகரன் சிறை செல்வதற்கு முன்னாள் அவரைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஜாமீனில் விடுதலையான தினகரன் என்னை நீக்குவதற்கு பொதுச்செயலாளர் […]

Continue Reading