சந்தானம் காட்டில் அடைமழை!

சந்தானம் காட்டில் செம்ம மழை இப்போது. காமெடியை கைவிட்டு விட்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், இப்போது ஜெட் வேகத்தில் பிக்-அப் ஆகியிருக்கிறார். அடுத்தடுத்து ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்கப் போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ என வரிசைகட்டி நிற்கின்றன சந்தானத்தின் படங்கள். இதில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரபரவென்று பிஸியாக நடித்துவரும் சந்தானம், […]

Continue Reading

சிம்புவுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் விவேக்!

விடிவி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விவேக், சந்தானம் மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு “ தங்களுக்குப் பிடித்தவர்கள் பெயர் சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால், யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு” […]

Continue Reading

சிம்புவின் இசை வெளியீட்டுத் தேதி!

தமிழ் சினிமாவில் டி.ராஜேந்தர் தொடாத துறையே இல்லை என்னும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை, தயாரிப்பு அத்தனையையும் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தவர். டி.ராஜேந்தரைப் போலவே அவரது மகனாகிய நடிகர் சிலம்பரசனும் கதை, வசனம், இயக்கம் பாடல்கள் என பலதுறை கலைஞனாக நிரூபித்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது எல்லோரும் அறிந்தது தான். தான் அறிமுகப்படுத்திய சந்தானத்தின் நடிப்பில் உருவாகிற ”சக்கப் போடு போடு ராஜா” படத்தின் மூலம் இசையமைப்பாளராக […]

Continue Reading

சிம்பு படத்தில் மேலும் ஒரு இசையமைப்பாளர்

முன்னணி நாயகனாக வலம் வரும் சிம்பு, தற்போது ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக வலம் வரவுள்ளார். சந்தானம், வைபவ் சாண்டில்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை வி.டி.வி கணேஷ் தயாரித்து வருகிறார். முக்கியமான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்ட படக்குழு, தற்போது பாடல்களை படமாக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்காக ஏற்கனவே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் பாடியுள்ளார். […]

Continue Reading