Tag: கார்த்தி
தானா சேர்ந்த கூட்டணி!
வலுவான கதைக்களத்துடனும், ஆழமான உணர்வுப் பின்னல்களுடனும் படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து “மன்னவன் வந்தானடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா நடித்த ”நெஞ்சம் மறப்பதில்லை” படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் […]
Continue Readingவேட்டைக்குத் தயாராகும் கார்த்தி!
சதுரங்க வேட்டை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் H.வினோத் உருவாக்கியிருக்கும் படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. 1995 லிருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு உண்மையான க்ரைம் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தியோடு முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள தீரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான ட்ரைலர் வெளியாகி அனைத்து […]
Continue Readingபிரியாவின் அடுத்த படம்!
பிரபல தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு ப்ரமோஷன் ஆகி பிரியா நடித்த முதல் படமாகிய “ மேயாத மான்” கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பிரியா பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் “பருத்திவீரன்” கார்த்தி நாயகனாக நடிக்கிறார் என்பது […]
Continue Readingரகுல் ப்ரீத் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்
தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்து, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் போனவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு முன்னணி நாயகியாக வலம் வரும் அவர், ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தற்போது கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ரஜத் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க […]
Continue Readingஅண்ணனுக்கு ஜோடியான தம்பியின் ஜோடி
சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் அனிருத் இசையில் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பாபு தயாரிக்கின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் […]
Continue Readingகருப்பு ராஜா வெள்ளை ராஜாவும் தனித்தனியா வர்றாங்களா?
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்க ஒப்பந்தமான படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியது. படத்தின் பாடலுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாடு சென்றிருந்தனர். மேலும் 4 பாடல்களும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு காரணங்கள் ஏதுமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக புதிய […]
Continue Readingஉதவித்தொகை வழங்கிய சிவகுமார் அறக்கட்டளை
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 22 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கினார்கள். விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 38 வருடங்களாக […]
Continue Reading
