ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு – விசு ஆரூடம்

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று சொல்ல முடியாது’ என்ற கருத்திற்கு, இந்தியாவில் பல முனைகளில் இருந்தும் கண்டனக் குரல்களும், மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. கமலின் கருத்திற்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமாகிய விசு கமலின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஹலோ கமல்ஜீ… நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை திரைக்கதை வசனம் […]

Continue Reading

கள்வர்களின் காலமாக மாறிவிட்டது : தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் விழித்திரு படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் மீரா கதிரவனின் இரண்டாவது படமான  “விழித்திரு” திரைப்படம் பல இன்னல்களைக் கடந்து வெளியாகியுள்ளது. வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் கற்காமல் இலக்கியம், அரசியல் புரிதலுடன் படைப்புகளை உருவாக்கும் பயிற்சி பெற்றவர் இவர். சிறந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த […]

Continue Reading

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நேற்று முற்றிலும் விலகியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக தெரிகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான அறிகுறிகள் நிலவி வருகின்றன. அதனால் அடுத்த […]

Continue Reading

இயக்குநரான தயாரிப்பாளரின் முதல் பாடல்

அமைதிப்படை-2, கங்காரு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. இதில் அரீஷ் குமார் கதாநாயகனாகவும், ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் இயக்குனர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் இ ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் […]

Continue Reading

அழகம் பெருமாளின் பர்னபாஸ் அனுபவம்

`தரமணி’ திரைப்படத்தில் பர்னபாஸ் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் அழகம்பெருமாள் நடித்துள்ளார். இது அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நடித்தது பற்றிய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு `தரமணி’ திரைப்படத்தில் நான் நடித்துள்ள பர்னபாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பர்னபாஸ் வாக்கு, பைபிள் வாக்கு லே’ என்ற வசனம் இப்போது பிரபலம். ராம் என்னிடம் கதை சொல்லும் போது இந்த காட்சிகள் இவ்வளவு ஸ்டிராங்காக வரும் என்று நான் […]

Continue Reading

அடுத்த முதல்வர் விஜய் அல்லது ரஜினி தான்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் `முதல்வன்’. அர்ஜுன், ரகுவரன், மனீஷா கொய்ராலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன், ரகுவரன் இடையே நடக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தியில் `நாயக்’ என்ற பெயரில் வெளியானது. அதில் அனில் கபூர், ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தற்போது தயாராகியிருக்கிறது. `பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், […]

Continue Reading

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் கைது

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, சமூக சேவகர். மேலும் இவர் லெனினிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஆதி திராவிடர் விடுதியில் தங்கிப் படித்த சட்டக்கல்லூரி மாணவர் சுரேஷ் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆதிதிராவிடர் விடுதியில் போதிய வசதிகள் செய்து தர வேண்டும், இறந்த மாணவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி திவ்யபாரதி, உயிரிழந்த சக மாணவரின் சடலத்தை வாங்க […]

Continue Reading