பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். […]

Continue Reading

பாலா படத்தின் முக்கிய அறிவிப்பு!

“தாரை தப்பட்டை” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் “நாச்சியார்”. ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜோதிகா நடித்து வரும் இந்த படத்தை பாலாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாகிய “பி ஸ்டுடியோஸ்” தயாரிக்கிறது. வழக்கம்போல படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், படம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். நாச்சியார் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி தான் அந்த அறிவிப்பு. “பி ஸ்டுடியோஸ்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “நாளை (15.11.2017) மாலை […]

Continue Reading

மீண்டும் இணைந்த “விர்ஜின் பசங்க” கூட்டணி!

“அடல்ட் காமெடி” ட்ரெண்டிற்கு புள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். “திரிஷா இல்லனா நயன்தாரா” என்று படமெடுத்து இளைஞர்களை “கிளர்ந்தெழச்” செய்தார். முதல் படத்திலேயே இந்த மகத்தான சாதனையை செய்த ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படமாகிய சிம்பு நடித்த “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தை ரசிகர்கள் சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தினால் வெற்றிபெறாமல் போனது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தை சத்தமே இல்லாமல் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஆதிக். “த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் […]

Continue Reading

சீறிய “லிட்டில் இளைய தளபதி” ஜி.வி.பிரகாஷ்!!

  இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். வரிசையாக அதிகமான படங்களில் நடித்து வரும் அவருக்கு “லிட்டில் இளைய தளபதி” என்று பட்டம் சூட்டியிருப்பதாக ஒரு செய்தி சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. இதையறிந்த ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது, “இது போன்ற தவறான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்றேத் தெரியவில்லை. யாடுடைய பட்டத்தையும் யாராலும் பெற முடியாது. இளைய தளபதி என்றால் அது […]

Continue Reading