சீறிய “லிட்டில் இளைய தளபதி” ஜி.வி.பிரகாஷ்!!

News

 

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். வரிசையாக அதிகமான படங்களில் நடித்து வரும் அவருக்கு “லிட்டில் இளைய தளபதி” என்று பட்டம் சூட்டியிருப்பதாக ஒரு செய்தி சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது.

இதையறிந்த ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,

“இது போன்ற தவறான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்றேத் தெரியவில்லை. யாடுடைய பட்டத்தையும் யாராலும் பெற முடியாது. இளைய தளபதி என்றால் அது விஜய் ஒருவராகத்தான் இருக்க முடியும். நான் விஜயின் ரசிகனாக இருக்கிறேன், அதுமட்டுமல்லாது அவர் எனக்கு நல்ல அண்ணனாகவும் இருக்கிறார். இதுபோல் தேவையற்ற வதந்திகளைப் பரப்புகிற நோய் இப்போது அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.