ஜனாதிபதி இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார்

இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பத்ம விருது வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம […]

Continue Reading

புதிய கவர்னராக பன்வாரிலால் நியமனம்

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந்தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னராக பணியாற்றி வரும் வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பை ஏற்றார். கடந்த செப்டம்பர் 2-ந்தேதி அவர் கூடுதல் கவர்னராக பதவி ஏற்றார். ஜெயலலிதா மரணம், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஒரு ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை […]

Continue Reading

அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்க நாளை பிரதமர் வருகை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தைப் பிரதமர் நரேந்திர மோடி […]

Continue Reading

பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய அவர், “மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன். இந்த பாராளுமன்றத்தில் நான் உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் மற்ற […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி, இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக விளங்கி ஜனநாயக மாண்புகளை மேம்படுத்துபவர் என்றும், அந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார். இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி பதவி காலம் சிறப்பாக அமைய […]

Continue Reading