ஹாலிவுட் படத்தில் இஷ்ரத்தின் தமிழ்ப்பாடல்

ஏ.ஆர்.ரகுமானுக்கு 3 சகோதரிகள், மூத்தவர் ரைஹைனா. இவர் மகன் தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இன்னொருவர் பாத்திமா. கடைக்குட்டி இஷ்ரத் காதரி. இவரும் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசைமைத்து, பாடியிருக்கிறார். இலங்கைத் தமிழரான ராஜ் திருச்செல்வன் அந்த படத்தை இயக்கியிருக்கிறார். அந்த வாய்ப்பு குறித்து கூறிய இஷ்ரத், ”அண்ணன் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிகளில் நான் பாடுவேன். ‘ஐ’ படத்தின் தெலுங்கு வெர்‌ஷனில் என்னோடு நீ இருந்தால் பாடலை பாடி இருக்கிறேன். ஐ.நா.சபையில் அண்ணன் நடத்திய நிகழ்ச்சிக்காக […]

Continue Reading

முழுக்க முழுக்க 3டி-யில் 2.0

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டை வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, சைனீஷ், ஸ்பானீஷ், […]

Continue Reading

`2.0′ படத்தின் புரமோஷன் திருவிழா

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ.400 கோடியில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கிறது. `2.0′ பட புரமோஷனுக்காக […]

Continue Reading

பலூனில் பறக்கும் புரோமோஷன்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் புதிய படம் ‘2.0’. இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக்காற்று பலூன்களில் இப்படத்தின் புரோமோஷன்களை செய்யவும் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியிருந்தனர். […]

Continue Reading

ஏ.ஆர். இசையில் மீண்டும் ஜி.வி.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல் பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே ‘ஜென்டில்மேன்’ படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகுமான் இசையில் […]

Continue Reading

அமீர்கானை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்த ‘தங்கல்’ திரைப்படம் ஏற்கனவே இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் வெளியாகி ரூ.700 கோடி வசூலாகி சாதனை செய்த நிலையில் சமீபத்தில் இந்த படம் சீனாவில் வெளியானது. கடந்த சில நாட்களில், சீனாவில் மட்டுமே இந்த படம் ரூ.825 கோடி வசூலாகி ‘பாகுபலி 2’ படத்தின் வசூலுக்கு கடும் சவால் கொடுத்து வருகிறது. சீன வசூலையும் சேர்த்து இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1600 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. […]

Continue Reading

26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமிதாப் – ரிஷி கூட்டணி

பாலிவுட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இணைந்து `102 நாட் அவுட்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் உமேஷ் சுக்லா இயக்கி வரும் அந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சுமார் 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் – ரிஷி மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த பாசப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், 102 வயது […]

Continue Reading

ஆச்சரியப்பட வைக்கும் 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்

ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகளையும் முடித்து விட்டால் ‘2.0’வின் படப்பிடிப்பு  முடிந்துவிடும் என்ற நிலையில், ஆயுத பூஜை அன்று இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தீபாவளி திருநாளில் ‘2.0’ திரைப்படம் திரைக்கு உள்ளது. சில மாதங்களுக்கு […]

Continue Reading