ஆச்சரியப்பட வைக்கும் 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்

News

ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இன்னும் ஒரு பாடல் காட்சியும் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகளையும் முடித்து விட்டால் ‘2.0’வின் படப்பிடிப்பு  முடிந்துவிடும் என்ற நிலையில், ஆயுத பூஜை அன்று இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

தீபாவளி திருநாளில் ‘2.0’ திரைப்படம் திரைக்கு உள்ளது. சில மாதங்களுக்கு முன் 2.0 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை மும்பையில் வெளியிட்டனர்.

லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் விற்பனையாகி இருக்கிறதாம். அதாவது 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ரூ.110 கோடிக்கு ஜீ டிவி வாங்கியிருக்கிறது.

2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விற்கப்பட்டதை அறிந்து பாலிவுட் வட்டாரம் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் போன்ற பாலிவுட் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இப்படியொரு பிசினஸ் உண்டு.

ஆனால், முதல் முறையாக ரஜினி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விலைபோயிருப்பது சாதனையாகவும் பேசப்படுகிறது.

2.0 படத்தின் பட்ஜெட் 350 கோடி என்று சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பகுதியை சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையிலேயே எடுத்துவிட்டது லைகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *